பக்கம்:அகநானூறு களிற்றியானை நிரை.djvu/109

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


________________

க0சு அகநானூறு (பாட்டு முடித்தனமாயின் - இவ்விடத்தே வினை யைச் செய்து முடித்தோ மாயின்,

கூ-அ. ஒலி தலை அலங்கு கழை கரலத் தாக்கி - தழைத்த தலையினையுடைய அசையும் மூங்கிலை ஒலி யுண்டாகத் தாக்கி, விலங்கு எழுந்து - பக்கங்களில் எழுந்து, கடுவளி உருத்திய கொடு விடு கூர் எரி - சூறாவளி வெப்பமுறச் செய்த கொழுந்து விட்டெரி யும் மிக்க தீ,

வீடர்முகை அடுக்கம் பாய்தலின் - பிளப்பையும் முழைஞ்சினை யுமுடைய மலைப் பக்கங்களிற் பரத்தலின், அமைக் கண் விடுநொடிமூங்கிலின் கணீக்கள் வெடித்தலால் எழும் ஒலி, கணக்கலை அகற் றும் - கூட்டமாகிய கலைமான்களைத் துரத்தும், வெம்முனை அரும் சுரம் நீந்தி - கொடிய போர் நிகழும் இடங்களாகிய அரிய சுரத் தினைக் கடந்து,

அ. கை மிக்கு - அளவு கடந்து, -

கூ--க. அகன் சுடர் கல் சேர்பு மறைய - பெரிய ஞாயிறு மேற்கு மலையினைச் சேர்ந்து மறைந்திட, மனை வயின் ஒள் தொடி மகளிர் - மனையிடத்து ஒளி பொருந்திய வளைகளை யணிந்த மகளிர், வெண் திரிக் கொளா அலின் - விளக்கின் கண் வெள்ளிய திரியைக் கொளுவுதலின், குறுநடைப் புறவின் செங்காற் சேவல் - குறுக அடியிட்டு நடக்கும் சிவந்த காலினை யுடைய புறாவின் சேவல், நெடுநிலை வியன் நகர் , உயர்ந்த மேல் நிலைகளை யுடைய பெரிய மனை யின் கண், வீழ்துணைப் பயிரும் - தம்பால் அன்புள்ள பெடையை அழைக்கும், புலம்பொடு வந்த புன் கண் மாலை - தனிமையொடு வந்த துன்பத்தைத் தரும் மாலையில்,

கச. யாண்டு உளர் கொல் என - நம் தலைவர் இப்பொழுது எவ்விடத்துள்ளாரோ என நினைந்து, கலிழ்வோள் எய்தி - கலங்கி அழுதுகொண்டிருக்கும் தம் தலைவியை அடைந்து,

கரு-கூ. இழை அணி நெடுந்தேர்க் கைவண் செழியன் - இழைகள் அணியப்பெற்ற நீண்ட தேரினையும் கை வண்மையையு முடைய செழியனது, மழைவிளையாடும் வளங்கெழு சிறுமலை - மழை தவழ்ந்திடும் வளம் மிக்க சிறுமலை என்னும் பெயருடைய, சிலம்பிற் கூதளம் கமழும் வெற்பின் - பக்கமலையிலே கூதளஞ் செடி கமழப் பெறும் மலையிலுள்ள, வேய் புரை பணைத்தோள் - மூங்கிலை ஒத்த பெரிய தோளில், பாயும் நோய் அசா வீட - பரவியுள்ள நோய் வருத்தம் நீங்க, -

முயங்குகம் பல - பன் முறையும் முயங்குவோம் ; (ஆதலின் )

உ-. இனி வல் விரைந்து எழு - இப்பொழுது வினையின் பொருட்டு என்னுடன் மிக விரைந்து எழுவாயாக.

(முடிபு) நெஞ்சே! இவண் வினை முடித்தனமாயின், இவ்வரிய சுரத்தினைக் கடந்து, நெடு நிலை வியனகரில் புன்கண் மாலையில், கலிழ்வோள் எய்தி, பணைத் தோள் நோயசா வீட முயங்குகம் பலவே ; ஆகலின் விரைந்து எழு.