[உடன்போயின தலைமகளை நினைந்து செவிலித்தாய் மனையின்கண் வருந்தியது.]
கிளியும் பந்துங் கழங்கும் வெய்யோள்
அளியும் அன்புஞ் சாயலும் இயல்பும்
முன்னாள் போலாள் இறீஇயரென் உயிரெனக்
கொடுந்தொடைக் குழவியொடு வயின்மரத் தியாத்த
௫) கடுங்கட் கறவையிற் சிறுபுறம் நோக்கிக்
குறுக வந்து குவவுநுதல் நீவி
மெல்லெனத் தழீஇயினே னாக என்மகள்
நன்னர் ஆகத் திடைமுலை வியர்ப்பப் .
பல்கால் முயங்கினள் மன்னே அன்னோ
க0) விறன்மிகு நெடுந்தகை பலபா ராட்டி
வறனிழல் அசைஇ வான்புலந்து வருந்திய
மடமான் அசாஇனந் திரங்குமரல் சுவைக்குங்
காடுடன் கழிதல் அறியின் தந்தை
அல்குபத மிகுத்த கடியுடை வியனகர்ச்
கரு) செல்வுழிச் செல்வுழி மெய்ந்நிழல் போலக்
கோதை யாயமொ டோரை தழீஇத்
தோடமை அரிச்சிலம் பொலிப்பஅவள்
ஆடுவழி ஆடுவழி அகலேன் மன்னே .
(சொ - ள்.) க-௩. கிளியும் பந்தும் கழங்கும் வெய்யோள் - கிளி பந்து கழங்கு எனும் இவற்றை மிக விரும்பிக் கைவிடாதவளாகிய என்மகள், அளியும் அன்பும் சாயலும் இயல்பும் - அருள் அன்பு மென்மை செயல் எனும் இவற்றால், முன்னாள் போலாள் - முன்னாட்களைப் போலாது வேறுபட்டுளாள், இஃதென்னோ? இறீஇயர் என் உயிர் என - என் உயிர் கழிவதாக என்று கூறி,
௪-எ. கொடுந் தொடைக் குழவியொடு - வளைந்த தொடையினை யுடைய கன்றுடன், மரத்து வயின் யாத்த - மரத்திடத்தே கட்டப் பெற்ற, கடுங்கண் கறவையின், விரைந்து விரைந்து கன்றைப் பார்த்திருக்கும் பசுவைப்போல, சிறுபுறம் நோக்கி - அவள் முதுகினைப் பார்த்து, குறுக வந்து குவவு நுதல் நீவி - அண்மையில் வந்து வளைந்த நெற்றியினைத் தடவி, மெல் எனத் தழுவினேன் ஆக - மெத்தெனத் தழுவிக் கொண்டேனாக,
எ-௯. என் மகள் - எனது மகள், ஆகத்து முலையிடை வியர்ப்பஆகத்தே முலையிடை வியர்வுண்டாக, பல்கால் நன்னர் முயங்கினள் - மன்னே அன்னோ - பன்முறை நன்கு தழுவிக் கொண்டனள், அந்தோ அது கழிந்ததே
(பாடம்.) 1, வண்ணப்புறக் கல்லாடனார்.