பக்கம்:அகநானூறு களிற்றியானை நிரை.djvu/116

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
50
௧௧௩
களிற்றியானை நிரை


பாயாக என்று, கண் நிறை நீர்கொடு கரக்கும் - கண்ணில் நிறையும் நீரைக் கொண்டு தனது ஆற்றாமையைப் பிறரறியாமை மறைக்கும், யான் என் செய்கோ எனவே - இதற்கு யான் என் செய்வேன் என்று, மல்லல் மூதூர் - வளம் பொருந்திய பழமையான ஊரின் கண், மறையினை சென்று - மறைந்து சென்று, சொல்லின் எவனோ - தலைவர்க்குச் சொல்லின் என்ன தவறாம்?

(முடிபு) பாண! சேர்ப்பன் கடுமீன் கலிப்பினும், கவ்வை சாற்றினும், பாணி நிற்ப, பகலும் அகலானாகிப் பயின்று வரும் மன்; இனி, அவன்பால் நீ மறையினை சென்று, அரிவை, துஞ்சா காண் எனச் சொல்லிக் கரக்கும்' யான் என் செய்கோ எனச் சொல்லின் எவனோ?

தணப்ப, நீந்தி வாராதோர் யார் என்னாது கண்கள் அழா நிற்க அதனைக் கரக்கும் எனவும், மறையினை சென்று சொல்லின் எவனோ எனவும் இயையும்.

(வி-ரை.) கழி-கடற் குட்டம். கடுமீன் - சுறா முதலியன. தோணியிற் சென்று மீன் பிடிப்பாரின்மையின் அவை செருக்கும் என்றார்; தலைவன் வருகைக்கு அஃதோர் இடையீடு; களவுக் காலத்து அலர் முதலானவற்றிற்குச் சிறிதும் அஞ்சாது பகலினும் அகலாதிருந்தான் என்க. மன், கழிவு. மணப்பரும் - கூடுதற்கரிய; மிக்க என்றபடி. தணப்ப - நீங்குகையாலே. நீந்தி - தாம் சென்றிருக்குமிடத்தைக் கழித்து ; பரத்தையர் சேரியைக் கடந்து. நீங்கி என்பது பாடமாயின் நம்மைப் பிரிந்து என்க. மல்லல் மூதூர் - பரத்தையரின் ஆரவார மிகுதியையுடைய சேரி. மறையினை - அவரறியாதபடி மறைந்து.

தலைவனைப் பிரிந்த ஆற்றாமையால் கண்கள் அழாநிற்கவும், அன்றில் பிரியினும் துஞ்சா காணெனச் சொல்லி, அதன் பொருட்டுக் கண்ணீர் சொரிவதுபோற் காட்டித் தனது ஆற்றாமையைத் தலைவி மறைக்கும் என்க.

'அரிவை கரக்கும் ; இதற்கு யான் என் செய்கோ ' எனச் சென்று சொல்லின் எவன் எனப் பாணனை நோக்கித் தோழி கூறினாள்.

இனி, துஞ்சா காண் ; இதற்கு என் செய்கோ எனச் சொல்லி அரிவை கரக்கும்; எனச் சொல்லின் எவனோ? என்றாளெனினும் அமையும்.

(மே - ள்.) 1'கற்புங் காமமும்' என்னுஞ் சூத்திரத்து, இச் செய்யுளை எடுத்துக் காட்டி, இதனுள் காம மிகுதியால் கண் தாமே அழவும், கற்பிற் கரக்கும் எனத் தலைவி பொறையும் நிறையும் தோழி பாணற்குக் கூறினாள், அவன் தலைவற்கு இவ்வாறே கூறுவன் எனக் கருதி. இனி என்றதனாற் கற்பும் பெற்றாம்', என்றார் நச்.

2'இன்பத்தை வெறுத்தல்' என்னுஞ் சூத்திரத்து, இன்பத்தை வெறுத்தல் என்பது இன்பத்திற் கேதுவாய பொருள் கண்டவழி அவற்றின்மேல்


1. தொல், கற்பு. ௪க. . 2. தொல், மெய்ப். உ௨