பக்கம்:அகநானூறு களிற்றியானை நிரை.djvu/127

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
௧௨௪
[பாட்டு
அகநானூறு

________________


இரும்பியன் றன்ன கருங்கோட் டெருமை
ஆம்பல் மெல்லடை கிழியக் குவளைக்

ரு) கூம்புவிடு பன்மலர் மாந்திக் கரைய
காஞ்சி நுண்டா தீர்ம்புறத் துறைப்ப
மெல்கிடு கவுள அல்குநிலை புகுதரும்
தண்டுறை யூரன் திண்டார் அகலம்
வதுவை நாளணிப் புதுவோர்ப் புணரிய

க0) பரிவொடு வரூஉம் பாணன் தெருவில்
புனிற்றாப் பாய்ந்தெனக் கலங்கி யாழிட்
டெம்மனைப் புகுதந் தோனே அதுகண்டு
மெய்ம்மலி உவகை மறையினென் எதிர்சென்
றிம்மனை அன்றஃ தும்மனை என்ற

கரு) என்னுந் தன்னும் நோக்கி
மம்மர் நெஞ்சினோன் தொழுது நின் றதுவே.

- மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார்.


(சொ - ள்.) க. தோழி - ,

க-க௦). நெருநல் - நேற்று, மணிகண்டன்ன துணி கயம் துளங்க - பளிங்கு மணியினைக் கண்டாற்போலும் தெளிந்த குளம் கலங்க, இரும்பு இயன்றன்ன கருங்கோட்டு எருமை - இரும்பாற் செய்தா லொத்த கரிய கொம்பினை யுடைய எருமைகள், ஆம்பல் மெல் அடை கிழிய- ஆம்பலின் மெல்லிய இலைகள் கிழிய, குவளைக் கூம்பு விடு பன் மலர் மாந்தி - குவளையின் குவிதல் நீங்கிய பல மலர்களையும் நிறையத் தின்று, கரைய காஞ்சி நுண் தாது ஈர்ம் புறத்து உறைப்ப-கரையின் கண்ணுள்ள காஞ்சியின் நுண்ணரிய தாது ஈரமுடைய உடம்பின் புறத்திலே சிந்த, மெல்கிடு கவுள - அசையிடும் தாழ் வாயினவாய், அல்கு நிலை புகுதரும்- தாம் தங்கும் கொட்டிலில் வந்து புகும், தண் துறை ஊரன் திண்தார் அகலம் - குளிர்ந்த துறையினை யுடைய ஊரனது திண்ணிய மாலையினைத் தரித்துள்ள மார்பினில், வதுவை நாள் அணிப் புதுவோர்ப் புணரிய - வதுவைக் காலத்து ஒப்பனையை யுடைய பரத்தையரைப் புணர்க்க, பரிவொடு வரூஉம் பாணன் - அவாவுடன் வந்த பாணன்,

க0--உ. தெருவில் புனிற்று ஆ பாய்ந்தெனக் கலங்கி-தெருவில் ஈன்ற அணிமையுடையதோர் ஆ தன்னைப் பாய்ந்தமையாற் கலக்க முற்று, யாழிட்டு - யாழினைக் கீழே போகட்டு, எம்மனைப் புகுதந்தோன் - எம்மில்லின் கண் புகுந்தான் ;

கஉ--௬. அது கண்டு --, மெய்ம்மலி உவகை மறையினென் - உடல் விம்ம எழுந்த உவகையை மறைத்து, எதிர்சென்று - அவன் எதிரே சென்று, உம்மனை இம்மனை யன்று அஃது என்ற - உங்கள் மனை இம்மனை யன்று அதுவாகும் என்று கூறிய, என்னும் தன்னும் நோக்கி - என்னையும் தன்னையும் பார்த்து, மம்மர் நெஞ்சினோன் -