பக்கம்:அகநானூறு களிற்றியானை நிரை.djvu/131

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
கஉஅ
[பாட்டு
அகநானூறு


க0) நும்மில் புலம்பினும் உள்ளுதொறு நலியும்
தண்வரல் அசைஇய பண்பில் வாடை
பதம்பெறு கல்லா திடம்பார்த்து நீடி
மனைமரம் ஒசிய ஒற்றிப்
பலர்மடி கங்குல் நெடும்புற நிலையே.

- மதுரைப் பண்டவாணிகன் இளந்தேவனார்.

(சொ - ள்.) க-௬. கூதிர் - கூதிர்க்காலத்தில், இன்னிசை உருமொடு கனை துளி தலை இ - இனிய ஓசையுடைய இடியுடன் மிக்க மழை பெய்திட, மன்னுயிர் மடிந்த பானாள் கங்குல் - நிலைபெற்ற உயிர்களெல்லாம் துயின்ற பாதியிரவில், தெரியிழை தேன் நாறு கதுப்பின் கொடிச்சியர் தந்தை - ஆராய்ந்தெடுத்த அணிகளையும் தேன் நாறும் கூந்தலினையுமுடைய குறத்தியர் தந்தைமார், காடுதேர் வேட்டத்து - காட்டில் விலங்குகளை ஆராயும் வேட்டையில், விளி விடம் பெறாது - துயிலும் இடம் பெறாமல், வரி அதள் படுத்த சேக்கை - புலித்தோலினை விரித்துள்ள படுக்கையில், இல் செறியும் - இல்லிலே வந்து தங்கியிருக்கும், குன்ற நாட- மலைகள் பொருந்திய நாட்டின் தலைவனே,

க0-௪. நும் இல் புலம்பின் நும் உள்ளுதொறும் நலியும் - நும்மைப் பிரிந்திருக்கும் தனிமையில் நும்மை நினையுந்தோறும் வருத்தா நிற்கும், தண்வரல் அசைஇய - குளிர்ச்சியுடன் அசைந்து வருதலையுடைய, பண்பில் வாடை - இனிய பண்பில்லாத வாடைக்கு, பதம் பெறுகல்லாது - குறித்த பருவத்தில் நும் வருகையைப் பெறாது, இடம் பார்த்து நீடி - நீர் வருங் காலத்தை நோக்கித் தாழ்த்து, மனை மரம் ஒசிய ஒற்றி - மனைமரம் முறிய வலித்து, பலர் மடி கங்குல் - பலரும் துயின்ற இரவில், நெடும் புற நிலை - நெடுங்காலம் புறத்தே நின்று கொண்டிருக்கும் எமது நிலை,

எ-௯. வனைந்து வரல் இளமுலை ஞெமுங்க - பண்ணினாற்போல் எழும் இளமுலைகள் அழுந்த, பல்லூழ் - பன்முறை, விளங்குதொடி முன்கை வளைந்து புறம் சுற்ற - விளங்கும் தொடிகளை யணிந்த முன் கை வளைந்து புறத்தினைச் சுற்றிக்கொள்ள, நின்மார்பு அடைதலின் - நின் மார்பை முயங்குதலினும், இனிதாகின்று - இனியதாயிற்று.

(முடிபு) குன்ற நாட! நும் உள்ளுதொறும் நலியும் வாடைக்கண், பதம் பெறுகல்லாது நீடி ஒற்றிக் கங்குலில் நிற்கும் புறநிலை, இளமுலை ஞெமுங்க முன் கை புறஞ்சுற்ற, நின்மார் படைதலின் இனிதாகின்று.

கொடிச்சியர் தந்தை, கூதிர்க் காலத்து, கங்குலில், வேட்டத்து, விளிவிடம் பெறாது சேக்கையில் இற்செறியும் குன்ற நாடு என்க.

(வி - ரை.) தலைஇ - பெய்து; பெய்ய எனத் திரிக்க. காடு தேர் - காட்டில் விலங்குகளைத் தேரும் என ஒரு சொல் வருவித்துரைக்க. விளிவிடம் - முடிவிடமுமாம். தந்தை - தந்தையர் என்க. வனைந்து வரல் - வனைந்தாற்போல் வரல்; வனைதல் - இயற்றுதல் ; வரல் -