பக்கம்:அகநானூறு களிற்றியானை நிரை.djvu/134

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
60
௧௩௧
களிற்றியானை நிரை


யமுனை யாற்றில் நீராடுங்கால், அவர்கள் கரையில் இட்டுவைத்த ஆடைகளைக் கண்ணபிரான் விளையாட்டாக எடுத்துக்கொண்டு குருந்த மரத்தேறி யிருந்தாராக, அப்பொழுது பலதேவர் அங்கு வர, அம் மகளிர் ஒரு சேர மறைதற்கு வேறு வழியின்மையால், தாம் ஏறியிருந்த குருந்த மரக் கொம்பினைத் தாழ்த்துக் கொடுத்தார் என்பது. இதனை,


1‘நீனிற வண்ண னன்று நெடுந்துகில் கவர்ந்து தம்முன்
பானிற வண்ண னோக்கிற் பழியுடைத் தென்று கண்டாய்
வேனிறத் தானை வேந்தே விரிபுனற் றொழுனை யாற்றுட்
கோனிற வளையி னார்க்குக் குருந்தவ னொசித்த தென்றான்"

என்னுஞ் சிந்தாமணிச் செய்யுளானும் அறிக. மாஅல் போல - வினை பற்றிய உவமை. யாமரத்தை வளைத்த களிறு அதினின்றும் தன் கன்ன மதத்திற் படிந்த வண்டுகளைக் கடியும் என்றவாறு. அது கண்டு அவர் வருவரென்று விரித்துரைக்க. சூரினையும் மருங்கினையும் அறுத்த என்க. பரங் குன்றத்து நெடுவரை - பரங் குன்றமாகிய நெடுவரை ; அத்துச் சாரியை அல்வழிக்கண் வந்தது. அந்துவன் - கடைச்சங்கப் புலவராகிய ஆசிரியர் நல்லந்துவனார். அவர் 2‘மண் மிசை யவிழ்துழாய்' என்னும் பரிபாடற் செய்யுளிற் பரங்குன்றத்தைப் பாடியுள்ளமை அறிக. அக்காலத்து நல்லிசைப் புலவர்கள் ஒருவர்பா லொருவர் மதிப்பு வைத்திருந்தமைக்கு இஃதோர் சான்றாகும். செண் - ஒப்பனை ; ஒப்பனை செய்யப் பெறுவதாற் கொண்டைக்குப் பெயராயிற்று. நப்பிரிந்து, வலித்தல் விகாரம். களிறு பிடி குழை யுண்ணுதற்கு யாமரத்தினை வளைத்துத் தருமென்றது, 3அன்புறு தகுந இறைச்சியுட் சுட்டியதாகும்.60. நெய்தல்


[தலைமகற்குத் தோழி செறிப்பறிவுறீஇ வரைவு கடாயது.]


பெருங்கடற் பரப்பில் சேயிறால் நடுங்கக்
கொடுந்தொழில் முகந்த செங்கோல் அவ்வலை
நெடுந்திமில் தொழிலொடு வைகிய தந்தைக்கு
உப்பு நொடை நெல்லின் மூரல் வெண்சோறு

ரு)4அயிலை துழந்த அம்புளிச் சொரிந்து
கொழுமீன் தடியொடு குறுமகள் கொடுக்கும்
திண்டேர்ப் பொறையன் தொண்டி அன்னஎம்
ஒண்டொடி ஞெமுக்கா தீமோ தெய்ய
ஊதை ஈட்டிய உயர்மணல் அடைகரைக்

க0) கோதை ஆயமொடு வண்டல் தைஇ
ஓரை ஆடினும் உயங்குநின் ஒளியெனக்
கொன்னுஞ் சிவப்போள் காணின் வென்வேல்


1, சிந்தா , உ0௬. 2. பரி. அ. 3. தொல். பொருளியல், ௩எ. (பாடம்) 4. அயிரை துழந்த. 5. ஞெமுங்கா தீமோ.