பக்கம்:அகநானூறு களிற்றியானை நிரை.djvu/135

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
௧௩௨
[பாட்டு
அகநானூறு


கொற்றச் சோழர் குடந்தை வைத்த
நாடுதரு நிதியினும் செறிய

கரு) அருங்கடிப் படுக்குவள் அறனில் யாயே.

- குடவாயிற் கீரத்தனார்.

(சொ - ள்.) க-அ. பெருங்கடல் பரப்பில் சேயிறால் நடுங்க - பெரிய கடற்பரப்பில் சிவந்த இறால் மீன் நடுங்க, கொடுந் தொழில் முகந்த செங்கோல் அவ்வலை - முகக்கும் கொடிய தொழிலையுடைய நேரிய கோலையுடைய அழகிய வலையைக் கொண்ட, நெடுந் திமில் தொழிலொடு வைகிய - நீண்ட படகிலிருந்து மீன் பிடிக்குந் தொழி லிற்றங்கிய, தந்தைக்கு-தன் தந்தைக்கு, உப்பு நொடை நெல்லின் மூரல் வெண்சோறு - உப்பு விற்றுக்கொண்ட நெல்லினாற் சமைத்த மூரலாகிய வெண் சோற்றை, அயிலை துழந்த அம்புளி சொரிந்து - அயிலை மீனை யிட்டாக்கிய அழகிய புளிக்கறியினைச் சொரிந்து, கொழுமீன் தடியொடு குறுமகள் கொடுக்கும் - கொழுமீன் கருவாட்டினுடன் இளைய மகள் இடும் இடமாகிய, திண் தேர்ப் பொறையன் தொண்டி அன்ன - திண்ணிய தேரினையுடைய சேரனது தொண்டியைப் போன்ற, எம் - எம்முடைய, ஒண் தொடி ஞெமுக்கா தீமோ. ஒள்ளிய வளையலைத் தழும்புறும்படி அமுக்கற்க ;

௯-கரு. ஊதை ஈட்டிய உயர் மணல் அடைகரை - வாடைக் காற்றுக் குவித்த உயர்ந்த மணல் மேடாகிய கரையில், கோதை ஆயமொடு வண்டல் தைஇ- மாலையையுடைய ஆயத்தாரோடு வண்டல் இயற்றி, ஓரை ஆடினும் - விளையாட்டினைப் புரியினும், உயங்கும் நின் ஒளி என - உன் மேனி வாடும் என, கொன்னும் சிவப்போள் - ஏதுவின்றியும் சினப்பவளாகிய, அறனில் யாய் காணின் - அறங் கருதாத யாய் இதனைக் காணின், வென்வேல் கொற்றச் சோழர் - வெல்லும் வேலினையுடைய வெற்றி பொருந்திய சோழர், குடந்தை வைத்த - குடவாயிற்கண் போற்றி வைத்த, நாடு தரு நிதியினும் - பகைவர் நாடு திறையாகக் கொடுத்த நிதியைக் காட்டினும், செறிய அருங்கடிப் படுக்குவள் - மிகவும் அரிய காவற்படுத்தி விடுவள்.

(முடிபு) தலைவ ! நெடுந்திமிற் றொழிலொடு வைகிய தந்தைக்குக் குறுமகள் மூரலாகிய வெண்சோறு புளிக்கறி சொரிந்து தடியுடன் கொடுக்கும் தொண்டி யன்ன எம் ஒண்தொடி ஞெமுக்காதீமோ; ஓரை யாடினும் உயங்கும் ஒளி எனக் கொன்னுஞ் சிவப்போளாகிய யாய் காணின், சோழர் குடந்தை வைத்த நிதியினும் செறிய அருங்கடிப் படுக்குவள்.

(வி - ரை.) இறால், அயிலை, கொழுமீன் - இவை மீனின் சில வகைகள். கொடுந் தொழிலையுடைய வலை என்க. கோல் - வலையிற் கட்டிய கோல். மூரல் சோறு: இரு பெயரொட்டு; முறுவல் போலுஞ் சோறு எனலுமாம். புளி - புளிக்கறிக்கு ஆகுபெயர். கொடுக்கும் தொண்டி யெனப் பெயரெச்சம் இடப் பெயர் கொண்டது. ஒண் தொடி என்பதற்குத் தலைவி யென்று பொருள் கூறி அவளை வருத்தாதே யென்று உரைத்தலுமாம். மோ, தெய்ய அசைகள். சிவப்போள் - வெகுள்பவள். குடந்தை - குடவாயில் என்பதன் மருஉ.