பக்கம்:அகநானூறு களிற்றியானை நிரை.djvu/136

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
61
௧௩௩
களிற்றியானை நிரை


(உ - றை.) "திமிற்றொழிலொடு வைகிய தந்தைக்கு இளமகளான வள் மீன்கொண்டு வருதற்கு முன்னே தான் உப்பு விற்ற நெல்லாலே ஆக் கப்பட்ட மூரல் வெண் சோற்றையும் புளிக் கறியையும் சொரிந்து கொழு மீன் தடியொடு கொடுத்தாற்போலத் தாம் வரைதற்குத் தாமும் புறம்பே முயல, நாங்களும் அறத்தொடு நிலை வகையால் ஈங்கே முயல்வேம் எனச் சொல்லியவாறாக்குக” என்றார் குறிப்புரைகாரர்.

(மே - ள்.) 1‘மரபே தானும், நாற்சொல் லியலான் யாப்புவழிப் பட்டன' என்னுஞ் சூத்திரத்து, ' குடவாயில் என்பதனைக் 'கொற்றச் சோழர் குடந்தை வைத்த' எனவும் . . . மேலையோர் திரித்த வகையானே இக் காலத்தும் திரித்துக் கொள்ளப்படுவன உள ' என்றார் பேரா.61. பாலை


[தலைமகன் பொருள்வயிற் பிரிய வேறுபட்ட தலைமகட்குத் தோழி சொல்லியது.]


நோற்றோர் மன்ற தாமே கூற்றம்
கோளுற விளியார்பிறர் கொளவிளிந் தோரெனத்
தாள்வலம் படுப்பச் சேட்புலம் படர்ந்தோர்
நாளிழை நெடுஞ்சுவர் நோக்கி நோயுழந்து

ரு) ஆழல் வாழி தோழி தாழாஅது
உருமெனச் சிலைக்கும் ஊக்கமொடு பைங்கால்
வரிமாண் நோன்ஞாண் வன்சிலைக் கொளீஇ
அருநிறத் தழுத்திய அம்பினர் பலருடன்
அண்ணல் யானை வெண்கோடு கொண்டு

க0) நறவுநொடை நெல்லின் நாண்மகிழ் அயருங்
கழல்புனை திருந்தடிக் கள்வர் கோமான்
மழபுலம் வணக்கிய மாவண் புல்லி
விழவுடை விழுச்சீர் வேங்கடம் பெறினும்
பழகுவ ராதலோ அரிதே முனாஅது

கரு) முழவுறழ் திணிதோள் நெடுவே ளாவி
பொன்னுடை நெடுநகர்ப் பொதினி அன்னநின்
ஒண்கேழ் வனமுலைப் பொலிந்த
நுண்பூண் ஆகம் பொருந்துதல் மறந்தே.

- மாமூலனார்.

(சொ - ள்.) க-ரு. தோழி வாழி -, நாள் இழை நெடுஞ்சுவர் நோக்கி - தலைவர் பிரிந்த நாளைக் குறித்து வைத்த நீண்ட சுவரினை நோக்கிச் (சென்ற நாட்களை எண்ணி யுணர்ந்து), நோய் உழந்து ஆழல் - வருந்தித் துன்பத்து ஆழ்ந்திடாதே, கூற்றம் கோள் உற விளியார் - கூற்றம் கொள்ள (வறிதே) மரியாமல், பிறர் கொள விளிந்


1. தொல். செய். அ0.