பக்கம்:அகநானூறு களிற்றியானை நிரை.djvu/96

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
40
௯௩
களிற்றியானை நிரை


பறைத் தொழு)தி - மீனை யுண்ணும் மெல்லிய சிறகினையுடைய பறவைக்கூட்டம், குவை இரும் புன்னைக் குடம்பை சேர - திரட்சி பொருந்திய பெரிய புன்னை மரத்திலுள்ள கூ.டுகளிற் சேரவும் , அசைவண்டு ஆர்க்கும் - அசைகின்ற வண்டுகள் ஒலிக்கும், அல்குறு காலை - எல்லாம் தம் பதிகளிலே சென்று தங்குங் காலமாகிய, மாலை - மாலைப் பொழுதிலே, தாழை தளரத் தூங்கி - தாழைகள் தளர்ந்திட அசைந்து, அழிதக வந்த கொண்டலொடு - (பிரிந்திருப்பார்) வருந்த வந்த கீழ்காற்றினால், கழி படர்க் காமர் நெஞ்சம் கையறுபு இனைய - மிக்க துன்பங் கொண்ட அழகிய நெஞ்சம் செயலற்று வருந்த, துயரஞ் செய்து நம் அருளாராயினும் - நமக்குப் பிரிதற் றுன்பினைச் செய்து (மீண்டு வந்து) நம்மை அருளாராயினும்,

க0. அறாலியர் அவருடைக் கேண்மை - அவரது நட்பு நமக்கு ஒழியாதிருப்பதாக;

கக-எ. கழனி வெண் நெல் அரிநர் பின்றைத் ததும்பும் - வயல்களில் வெண்ணெல்லை அரிவோரது பின்பு நின்றொலிக்கும், தண்ணுமை வெரீஇய தடந் தாள் நாரை - பறை ஒலியினைக் கேட்டஞ்சிய நீண்ட கால்களையுடைய நாரை, செறி மடை வயிரிற் பிளிற்றி - செறிந்த மூட்டு வாயினையுடைய கொம்பு போல் ஒலித்து, பெண்ணை அகமடல் சேக்கும் துறைவன் - பனை மரத்தின் மடலகத்தே தங்கும் கடற்றுறையுடைய தலைவனது, இன் துயில் மார்பில் சென்ற என் நெஞ்சு - இனிய துயிற்குரிய மார்பின் பொருட்டுச் சென்ற என் நெஞ்சு, அளியின்மையின் அவண் உறை முனைஇ - அவர் அளி செய்திலரென்று அங்கே தங்குதலை வெறுத்து, வாரற்க தில்ல - இங்கு வாராதிருப்பதாக.

(முடிபு) தோழி! மாலைக் கொண்டலால் நெஞ்சம் இனைய, (தலைவர்) துயரஞ் செய்து அருளாராயினும் அவருடைக் கேண்மை அறாலியர்; துறைவன் மார்பிற் சென்ற என் நெஞ்சு வாரற்க.

கூம்ப, ஒலிப்ப, சேர, ஆர்க்கும் காலையாய மாலை எனவும், தூங்கி வந்த கொண்டல் எனவும் இயையும்.

(வி - ரை.) நீல், கடைக்குறை. அசை வண்டு- நீர்ப்பூக்களிலும் கோட்டுப் பூக்களிலும் தடுமாறுகின்ற வண்டு. நம் - நம்மை. உறை - உறைதல்; முதனிலைத் தொழிற்பெயர். வாரற்க என்றது இங்கு வந்தால் என்னொடு கிடந்து துயருறு மென்றவாறு. தில் - விழைவு : அசையுமாம்.

(உ-றை.) 'வெண்ணெல் அரிநர் தங் காரியஞ் செய்யப் பறை கொட்டுவிக்க, நாரை வேற்று நிலத்ததாகிய பெண்ணையிலே சென்று தங்கித் தான் வாழுமிடமாகிய மருத நிலத்தை மறந்தாற்போலத் தங்காரியஞ் செய்ய நம்மைப் பிரிவார் இல்லைப் பிரிந்த வழி நம்முடைய நெஞ்சு நம்மை விட்டுத் தனக்கு அந்நியமாகிய அவர் மார்பிலே சென்றது என்றவாறு என்பது குறிப்புரை.