பக்கம்:அகநானூறு களிற்றியானை நிரை.djvu/97

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
௯௪
[பாட்டு
அகநானூறு(மே - ள்.) '1முதல் கருவுரிப் பொருள்' என்னுஞ் சூத்திரத்து, நெய்தற்கு முதலும் கருவும் உரியும் வந்ததற்கு இச் செய்யுளை எடுத்துக் காட்டினர் இளம்பூரணரும் நச்சினார்க்கினியரும்.

2'வைகுறு விடியல்' என்னுஞ் சூத்திரத்து, நெய்தற்கு மாலையும் வந்தமைக்கு இச் செய்யுளை எடுத்துக் காட்டினர், நச்.


 
41. பாலை
 

[தலைமகன் பொருள்வயிற் பிரிந்தவிடத்துக் கிழத்தியை நினைந்து சொல்லியது.]


க) வைகுபுலர் விடியல் மைபுலம் பரப்பக்
கருநனை அவிழ்ந்த ஊழுறு முருக்கின்
எரிமருள் பூஞ்சினை இனச்சிதர் ஆர்ப்ப
நெடுநெல் அடைச்சிய கழனியேர் புகுத்துக்

ரு) குடுமிக் கட்டிய படப்பையொடு மிளிர
அரிகால் போழ்ந்த தெரிபகட் டுழவர்
ஓதைத் தெள்விளி புலந்தொறும் பரப்பக்
கோழிணர் எதிரிய மரத்த கவினிக்
காடணி கொண்ட காண்டகு பொழுதின்

க0) நாம்பிரி புலம்பின் நலஞ்செலச் சாஅய்
நம்பிரி பறியா நலனொடு சிறந்த
நற்றோள் நெகிழ வருந்தினள் கொல்லோ
மென்சிறை வண்டின் தண்கமழ் பூந்துணர்
தாதின் துவலை தளிர்வார்ந் தன்ன

௧௫) அங்கலுழ் மாமை கிளைஇய
நுண்பல் தித்தி மாஅ யோளே.

-3குன்றியனார்.

(சொ - ள்.) க௩-௬. மென்சிறை வண்டின் - மெல்லிய சிறகினை யுடைய வண்டுகளையுடைய, தண்கமழ் பூந்துணர் - குளிர்ச்சியை யுடைய மணக்கும் பூங்கொத்துக்களிலுள்ள, தாதின் துவலை - தாதுடன் கூடிய தேன்றுளி, தளிர் வார்ந்தன்ன - தளிரில் ஒழுகியது போலும், அம் கலுழ் மாமை கிளைஇய - அழகு ஒழுகும் மாமை நிறத்தில் கிளைத்துத் தோன்றும், நுண்பல் தித்தி - சிறிய பல தேமற் புள்ளிகளை யுடைய, மாயோள் - நம் கிழத்தி,

க- ௯. வைகு புலர் விடியல் - தங்கிய இருள் புலர்ந்திடும் விடி யற்காலத்தில், மை புலம் பரப்ப - எருமைகள் நிலத்தே பரந்து செல்ல, முருக்கின் கருநனை அவிழ்ந்த - முருக்க மரத்தின் பெரிய அரும்புகள் முறுக்கு நெகிழ்ந்த, எரி மருள் ஊழ் உறு பூஞ்சினை -


1. தொல், அகத், ௩. 2. தொல், அகத். ௮. (பாடம்.) 3. சேரமானந்தையார்.