பக்கம்:அகநானூறு களிற்றியானை நிரை.djvu/98

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
42]
௯௫
களிற்றியானை நிரை


நெருப்பை ஒத்த மலர்ந்த பூக்களையுடைய கிளைகளில், இனச் சிதர் ஆர்ப்ப - கூட்டமாய வண்டுகள் ஒலிக்க, நெடு நெல் அடைச்சிய கழனி ஏர் - நெடிய நெற்பயிரினை நட்ட கழனியிலுள்ள ஏர்களை, குடுமிக் கட்டிய படப்பையொடு புகுத்து - தலை குவிந்த கட்டிகளை யுடைய தோட்டத்தில் சேர்த்து, மிளிர - மண் பிறழும்படி, அரிகால் போழ்ந்த - அரிதாளையுடைய நிலத்தைப் பிளந்து உழுத, தெரி பகட்டு உழவர் - ஆராய்ந்த எருதுகளைக் கொண்ட உழவர்களது, ஓதைத் தெள்விளி - ஏர் ஓட்டும் ஓசையாகிய தெளிந்த ஒலி, புலந்தொறும் பரப்ப - இடந்தோறும் பரக்க, கவினிக் கோழ் இணர் எதிரிய மரத்த - அழகுற்றுச் செழிய பூங்கொத்துக்கள் தோன்றிய மரங்களையுடைய, காடு அணி கொண்ட - காடு அழகுபெற்ற, காண்தகு பொழுதில் - காட்சி பொருந்திய இக் காலத்தில்,

க0-உ. நம் பிரிபு அறியா நலனொடு சிறந்த நற்றோள் - நம் பிரிவு என்பதே அறியாமல் இயற்கை யழகினோடுகூடி மிகச் சிறப்புற்றிருந்த தனது நல்ல தோள்கள், நாம் பிரி புலம்பின் - இப்போது நாம் பிரிந்திட்ட தனிமையால், நலம் செலச் சாஅய் நெகிழ - அவ் வியற்கை யழகு கெட மிகவும் மெலிந்து நெகிழ்ந்திடலால், வருந்தினள் கொல்லோ - வருந்தினாளோ.

(முடிபு) மாயோளாகிய நம் கிழத்தி, காடணி கொண்ட காண்டகு பொழுதில், தனது நற்றோள் நலஞ்செலச் சாஅய் நெகிழ வருந்தினள் கொல்லோ.

மைபுலம் பரப்ப, சிதர் ஆர்ப்ப, தெள்விளி பரப்ப, காடணி கொண்ட பொழுது என்க.

(வி - ரை.) விடியலும் எருமையும் பாலைக்கண் மயங்கி வந்தன. படப்பையொடு - படப்பையில். அரிகால் - புன்செய்ப் பயிர்களை அரிந்த தாள்,

(மே - ள்.) 1'ஒன்றாத் தமரினும் ' என்னுஞ் சூத்திரத்து, இச் செய்யுள் 'பகைவயிற் பிரியும் தலைமகன் கூற்று' எனவும், . . . 'இவ்வாறு வருவன குறித்த பருவம் பிழைத்துழி என்று கொள்ள' எனவும் கூறினர் இளம்.42. குறிஞ்சி

[தலைமகன் வரைவு மலிந்தமை தோழி தலைமகட்குச் சொல்லியது.]


மலிபெயற் கலித்த மாரிப் பித்திகத்துக்
கொயலரு 2நிலைய பெயலேர் மணமுகைச்
செவ்வெரி நுறழுங் கொழுங்கடை மழைக்கண்
தளிரேர் மேனி மாஅ யோயே

ரு) நாடுவறங் கூர நாஞ்சில் துஞ்சக்
கோடை நீடிய பைதறு காலைக்


1. தொல். அகத். சச. (பாடம்) 2. நிலைஇய.