பக்கம்:அகநானூறு 1, புலியூர்க் கேசிகன்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

90

அகநானூறு - களிற்றியானை நிரை


கிடக்கும் அரிய சுர நெறியிலே, உயர்ந்த களிற்றினைக் கொன்ற புலிகள் திரிந்து கொண்டிருக்கும். ஆள் நடமாட்டமே அற்ற அத்தகைய காட்டினையுங் கடந்து அவர் போயினரே!

என்னுடைய மாமை நிறமானது, அவருடைய பிரிவினால், ஐதாகிய நுண்ணிய பசலை பரத்தலால், பீர்க்கின் அழகிய மலரினை ஒப்பதாக விளங்கும். ஊரிலே எழுகின்ற அலரானது, அன்னி என்பவன், குறுக்கைப் பறந்தலை என்னும் போர்க்களத்திலே, திதியன் என்பவனது பழைமையாக நிலைபெற்ற சிறப்புடைய புன்னைமரத்தின் பெரிய அடியை வெட்டித் துண்டித்த அந்தக் காலத்திலே, கூத்தர்கள் எடுத்த இன்னிசை ஆரவாரத்தினும் பெரிதாகும்.

பொன்னரி மாலையினையும், கடலிடத்தினைப் புடை பெயரச் செய்த வென்றியினையும், நல்ல வேலினையும் உடைய வானவரம்பனது, வலிபொருந்திய போர்முனையிலே கலங்கிய, உடைந்த மதில்களையுடைய ஓர் அரணைப் போல, அரணிடத்தே உள்ளார் கலங்கி அழியுமாறு போல, யானும், அச்சம் பொருந்திய பிரிவுநோயின் காரணமாக உறக்கம் அற்றவளாயினேன். அஞ்ச அஞ்ச உடன்று வருகின்ற காம நோயினை உடையவளாகி, ஆதிமந்தியைப் போலக், காதலனைக் காணாத சிறுமையினால், யானும் துன்பத்தால் வாடி வாடி உழல்வேனோ?

சொற்பொருள்: 1. உழிஞ்சில் - வாகை. துணர் - நெற்றின் கொத்து. 2. பறை கரடிகை. அரிப்பன ஒலிப்ப - விட்டுவிட்டு இசைப்ப. 4. ஆர் ஆறு போவதற்கு அரிய வழி நிவப்பன களிறு - உயரமான களிறு, 5. உகளுதல் - திரிதல். 15. உழலல் - தேடித் திரிதல்; உழல்வேனோ என்றாள் இறந்து படுதலை நினைந்து. 16. கடல் கால் கிளர்தல் வேலாற் கடலோட்டினான் ஆதலால், கிளர்தல் - புடை பெயர்தல். 17. வானவரம்பன் - சேரன்.

விளக்கம்: 'ஆதிமந்திபோல’ என்றதனால், வெள்ளி வீதியாரும் கணவனைக் காணாதாராய்ப் பலப்பல விடங் களினும் தேடி உழன்றனர் என்பர். 'உடைமதில் ஒரரண் போல’ - பிரிவினால் கலங்கிய நெஞ்சின் உறுதிக்கு உவமம். அரண் உடையவே அரனுடைய ஊரும் அழியும்; நெஞ்சு அழியவே தானும் இறந்துபடுவள் என்க. 10. தொன்னிலை என்பது தொன்மையாக நிலைபெற்று வழி வழி வருவதான காவன் மரம் எனச் சுட்டும். 16. கடல்கால் கிளர்ந்த வெற்றி - கடற்கண் உள்ளாராகிய பகைவரை அழித்த வெற்றி. ஒரரணே உள்ளானாகிய வேந்தன் ஒருவன், அதன் மதிலும் பகைவர் பொருதலாற் சிதைந்து விழக் கண்டு, நிலை கலங்கினாற் போலத்