பக்கம்:அகநானூறு 1, புலியூர்க் கேசிகன்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூலமும் உரையும்

புலியூர்க் கேசிகன் ☆ 93


47. முயங்குகம் பலவே!

பாடியவர்: ஆலம்பேரிச் சாத்தனார். திணை: பாலை, துறை: தலைமகன் இடைச்சுரத்து அழிந்த நெஞ்சிற்குச் சொல்லியது. சிறப்பு: செழியனும் அவனது சிறுமலையும்.

(வினைமேற்சென்ற தலைமகன், இடைவழியிலே தன் காதல் மனைவியை நினைந்து நெஞ்சம் தளர்ந்தான். அவன் வினையினை முடித்து வெற்றியுடன் வீடுதிரும்ப வேண்டும் என்ற ஊக்கமும் உடையவன்; அதனால், தன் நெஞ்சிற்கு இவ்வாறு கூறுகின்றான்.)

அழிவில் உள்ளம் வழிவழிச் சிறப்ப
வினைஇவண் முடித்தனம் ஆயின், வல்விரைந்து
எழுஇனி - வாழிய நெஞ்சே! - ஒலிதலை
அலங்குகழை நாலத்தாக்கி, விலங்கு எழுந்து,

கடுவளி உருத்திய கொடிவிடு கூர்எரி
5


விடர்முகை அடுக்கம் பாய்தலின், உடனியைந்து,
அமைக்கண் விடுநொடி கணக்கலை அகற்றும்
வெம்முனை அருஞ்சுரம் நீந்திக் கைம்மிக்கு
அகன்சுடர் கல்சேர்பு மறைய, மனைவயின்

ஒண்தொடி மகளிர் வெண்திரிக் கொளாஅலின்,
10


குறுநடைப் புறவின் செங்காற் சேவல்
நெடுநிலை வியன்நகர் வீழ்துணைப் பயிரும்
புலம்பொடு வந்த புன்கண் மாலை
'யாண்டு உளர்கொல்?"எனக், கலிழ்வோள் எய்தி,

இழைஅணி நெடுந்தேர்க் கைவண் செழியன்
15


மழைவிளை யாடும் வளம்கெழு சிறுமலைச்
சிலம்பின் கூதளங் கமழும் வெற்பின் -
வேய்புரை பணைத்தோள், பாயும்
நோய்அசா வீட, முயங்குகம் பலவே!

குறைக்காற்று, தழைத்த தலையினையும் அசையும் இயல்பினையும் உடைய மூங்கில்கள் ஒன்றுடன் ஒன்று உரசி ஒலிக்குமாறு தாக்கும். அதனால், அந்தப் பக்கங்களிலே கொழுந்துவிட்டு எரியும் மிக்க தீயானது எழும். அந் நெருப்புக் காட்டையே வெம்மையுறச் செய்யும். மலையடுக்குகளிலேயுள்ள வெடிப்புக்களிலும் குகைகளிலும் அந்தத் தீ பாயும். அதனால், அங்குள்ள மூங்கிற்கணுக்கள் ஒலியோடு வெடிக்கும். அதனைக் கேட்டுக் கலைமான் வட்டங்கள் வெருவி ஓடும். அத்தகைய முனைகளையுடைய, கொடிய, கடத்தற்கு அரிய சுரத்தினையும் நாம் கடந்தோம்.