பக்கம்:அகநானூறு 1, புலியூர்க் கேசிகன்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூலமும் உரையும்

புலியூர்க் கேசிகன் ☆ 105


மூக்கினைப்போல விளங்கும் நத்தைகள் பொரியரையுடையது போல மூடிக்கொண்டிருக்கும். தனிமைகொண்ட அந்த நெறியிலே, -

கூரிய பற்களையுடைய செந்நாயானது, பசியினால் வருந்தியிருக்கும் தன் பிணவோடுங் கூடிச், சிறந்த அம்பினரான மறவர்கள் எய்ய இறந்து போயினவருடைய, பெயரும் பீடும் எழுதியிருக்கும் நடுகற்களின் இனிய நிழலிலே சென்று தங்கியிருக்கும்.

என்றும் இல்லாது வந்து இரந்தோருக்கு, யாதும் ல்லையென்று கூறித் தன்னால் இயலுவதனைச் செய்யாது மறைப்பதற்கு வலிமையற்றது . அவர் நெஞ்சம். அது வற்புறுத்துதலினால், நம்மைக் காட்டினும் பொருளின் மீதினிலேயே நம் காதலர் காதலுடையவராயினார். நீயோ, விரைந்து வந்து நமக்கு அருளுதலே நம் காதலரது பெருவிருப்பம் என்றாய். உண்மையை நீ அறியாய்காண்!

சொற்பொருள்: 1. இருள் அற இரவு ஒழியுமாறு. 2,3 திகிரிக் கடுங்கதிர் - தேரூர்ந்து வரும் கடுங்கதிர் எனலும் ஆம். எறித்த வருத்திய விடுவாய் - வெடிப்புக்கள். 5. வறந்த வறண்ட 7. உழிஞ்சில் - வாகை, 8. நொள்ளை - நத்தை, 9. பொரியரை பொரிந்த அடிமரம். 10. விழுத்தொடை குறிதப்பாது அம்பு தொடுக்கும் ஆற்றல் 12. கவலை கவறுபட்ட வழி. 14 வலிப்ப - வற்புறுத்த, -

விளக்கம்: 'நடுகல்லின் நிழலில் நிற்கும்’ எனவே வேறு நிழல் இல்லாத காடு என்க; வாகையும் நிழலற்றுப் போயிற்று என்க. வறியவர்க்கு உதவும் அருளினையுடையராய்ச் சென்ற அவர்க்கு, நம்மீது அருள் இல்லையே; பொருளார்வம் தான் இப்போது மிகுதியாய்விட்டது போலும் என்று தலைவி வருந்துகிறாள். மறவர் எய்த பிணங்களும் புதைக்கப்பட்டுப் போயினதால், ஏதும் கிடையாத பசி செந்நாய்க்கு என்றும் அறிக.."எழுத்துடை நடுகல்’ என்பதும் ஒர்க.

54. புதல்வற் பொய்க்கும் பூங்கொடி!

பாடியவர்: மாற்றுர்கிழார் மகனார் கொற்றங்கொற்றனார்; நொச்சி நியமங்கிழார் மகனார் எனவும் பாடம் திணை: முல்லை. துறை: வினை முடித்து மீளும் தலைமகன் தேர்ப்பாகற்குச் சொல்லியது. வேந்தன் பகைமையைத் தான் தணித்தமை கூறுதலின், அந்தணன் துதிற் பிரிந்தமை பெற்றாம் என்பர் நச்சினார்க்கினியர். 'போர் மேற்சென்ற தலைவன், பகைவர் தோற்றுத் திறைசெலுத்திய பின், இங்ஙனம் கூறினான்’ எனவும் உரைக்கலாம். சிறப்பு: சிறுகுடிகிழான் பண்ணன்.