பக்கம்:அகநானூறு 1, புலியூர்க் கேசிகன்.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

106

அகநானூறு -களிற்றியானைநிரை


(வேந்துவினை முடித்தற் பொருட்டுத் தன் காதன் மனைவியைப் பிரிந்து சென்றான் தலைவன் ஒருவன். சென்ற வினையும் இனிதே நிறைவுற்றது. அவன் வீடு திரும்பிக் கொண்டிருக்கின்றான். மாலைவேளை, வானத்தே இளநிலா அரும்பிக் கொண்டிருந்தது. தன் வரவை எதிர் பார்த்து வாயிலே துணையாக நிற்கும் தன் காதலியை நினைந்து இப்படிக் கூறுகின்றான்.)

          விருந்தின் மன்னர் அருங்கலம் தெறுப்ப,
          வேந்தனும் வெம்பகை தணிந்தனன், தீம்பெயற்
          காரும் ஆர்கலி தலையின்று: தேரும்
          ஓவத் தன்ன கோபச் செந்நிலம்,
          வள்வாய் ஆழி உள்உறுபு உருளக், 5

          கடவுக காண்குவம் - பாகமதவு நடைத்
          தாம்புஅசை குழவி வீங்குசுரை மடியக்,
          கனையலம் குரல காற்பரி பயிற்றிப்,
          படுமணி மிடற்ற பயநிரை ஆயம்
          கொடுமடி உடையர் கோற்கைக் கோவலர் . 10

          கொன்றையம் குழலர் பின்றைத் தூங்க,
          மனைமனைப் படரும் நனைநகு மாலைத்,
          தனக்கென வாழாப் பிறர்க்கு உரியாளன்
          பண்ணன் சிறுகுடிப் படப்பை நுண்இலைப்
          புன்காழ் நெல்லிப் பைங்காய் தின்றவர் 15

          நீர்குடி சுவையின் தீவிய மிழற்றி,
          'முகிழ்நிலாத் திகழ்தரும் மூவாத் திங்கள்!
          பொன்னுடைத் தாலி என்மகன் ஒற்றி,
          வருகுவை ஆயின், தருகுவென் பால்"என,
          விலங்கு அமர்க்கண்ணள் விரல்விளி பயிற்றித், 20

          திதலை அல்குல்எம் காதலி
          புதல்வற் பொய்க்கும் பூங்கொடி நிலையே!

கோவலர்கள், வளைந்த மடிகோலிய உடையினர். அவர்கள் கொன்றைப் பழத்தினாலாகிய அழகிய குழலினை இசைத்தவராக மெத்தெனத் தமக்குப் பின்னே நடந்து வந்து கொண்டிருக்க, இல்லங்களிலே தாம்புக்கயிறுகளாற் பிணிக்கப்பட்டிருக்கும் செருக்கிய நடையினையுடைய தம் இளங்கன்றுகளினிடத்தே, பெருத்த தம் பால்மடிகள் கரைவதனை விரும்பியனவாகக் கனைக்கின்ற குரலுடன், ஒலிக்கும் மணிகள் விளங்கும் கழுத்தினவான பசுக்கூட்டங்கள், தத்தம் வீடுகளை நோக்கித் தம் கால்களை விரைவாகப் பெயர்த்து