பக்கம்:அகநானூறு 1, புலியூர்க் கேசிகன்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

112

அகநானூறு - களிற்றியானை நிரை



57. ஆனாது அழுவோள்!

பாடியவர்: நக்கீரர். திணை: பாலை. துறை: பொருள் வயிற் பிரிந்த தலைமகன் கிழத்தியை நினைந்து சொல்லியது. சிறப்பு: பாண்டியன் நெடுஞ்செழியன் முசிறியை முற்றுகையிட்டு வென்றது.

(வேந்தனுக்குரிய தொழில் பூண்டு தன் தலைவியைப் பிரிந்து சென்றான் ஒரு தலைவன். வினைமுடித்துத் தலைவன் திரும்பி வரும்போது, தன் காதலியை நினைந்து, தேரை விரைந்து செலுத்துமாறு தன் பாகனிடம் கூறுகின்றான்.)

          சிறுபைந் தூவிச் செங்காற் பேடை
          நெடுநீர் வானத்து, வாவுப்பறை நீந்தி
          வெயில்அவிர் உருப்பொடு வந்து,கனி பெறாஅது,
          பெறுநாள் யாணர் உள்ளிப், பையாந்து,
          புகல்ஏக் கற்ற புல்லென் உலவைக் 5

          குறுங்கால் இற்றிப் புன்தலை நெடுவீழ்
          இரும்பினர்த் துறுகல் தீண்டி,வளி பொரப்,
          பெருங்கை யானை நிவப்பின் தூங்கும்
          குன்ற வைப்பின் என்றுழ் நீள்இடை
          யாமே எமியம் ஆகத், தாமே 10

          பசுநிலா விரிந்த பல்கதிர் மதியிற்
          பெருநல் ஆய்கவின் ஒரீஇச், சிறுபீர்
          வீஏர் வண்ணம் கொண்டன்று கொல்லோ -
          கொய்சுவற் புரவிக் கொடித்தேர்ச் செழியன்
          முதுநீர். முன்றுறை முசிறி முற்றிக் 15

          களிறுபட எருக்கிய கல்லென் ஞாட்பின்
          அரும்புண் உறுநரின் வருந்தினள், பெரிதுஅழிந்து,
          பானாட் கங்குலும் பகலும்
          ஆனாது அழுவோள் - ஆய்சிறு நுதலே!

நெஞ்சமே! சிறிய மென்சிறகினையும் சிவந்த காலினையும் உடையது வாவற்பேடை அது, நெடிய தன்மையினையுடைய வானத்துத் தாவிப் பறந்துசெல்லும். வெயிலினால் கருகிய உடலோடு துயருற்று வந்தும் கனிகள் பெறாமல் பசியால் வருந்தும். முன்போலக் கனிகளைப் பெறும் நாளின் வளனை நினைந்து நினைந்து ஏங்கியபடியுமிருக்கும்.

பொலிவழிந்த கிளைகளையும், குறுகிய அடியினையும் உடையது இற்றி மரம். அதன் புல்லிய உச்சியினை உடைய நீண்ட