பக்கம்:அகநானூறு 1, புலியூர்க் கேசிகன்.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மூலமும் உரையும்

புலியூர்க் கேசிகன் ☆ 117


செய்யும் அருஞ்செயலாகிய பொருளீட்டலையே நினைந்தார். நம்மைப் பிரிந்து சென்று, அத் தொலைதுார நாட்டிலேயே வாழ்கின்றார். அவர் சென்ற வழியின்கண்ணே

வடக்கின் கண்ணதாகிய நீர்வளம் அறாத யமுனையாற்றின், நெடிய மணலையுடைய அகன்ற நீர்த்துறையிலே நீராடிய ஆயர்மகளிர்கள், தண்ணிய தழையாடையினை உடுத்துக் கொள்ளுமாறு, குருந்தமரம் வளைந்திட மிதித்துத் தந்து உதவிய திருமாலான கண்ணனைப்போல, மெல்லிய தலையினையுடைய இளைய தன் பிடியானது அழகிய தளிர்களை உண்ணுமாறு, களிறானது யாமரத்தின் உயர்ந்த நிலையினையுடைய கிளைகளை வளைத்துத் தந்து, மதத்தால் நனைந்த தன் கன்னத்திலே படியும் வண்டுகளையும் ஒட்டிக் கொண்டிருக்கும். (அதனைக் காணும் அவரும் நின்னை நினைந்து உடனேயே வீடு திரும்புவர் என்பது கருத்து)

சொற்பொருள்: 1. அமன்ற - நிறைந்த துணைமலர் - ஒன்றே போல ஒத்து விளங்கும் இருமலர்கள். 2. பெருந்தகை - பேரழகு. 5. அண்டர் மகளிர் - ஆயர் மகளிர்; தேவ மகளிரே ஆயர் மகளிராக வந்து அந்நாள் தோன்றியிருந்தனர் என்று கூறுவர். 6. மாஅல்-திருமாலான கண்ணன்.10.மருங்கு-சுற்றம்.1.சினமிகு முருகன் - இதற்குச் சீர்மிகு முருகன் எனவும் பாடம் உண்டு. 12. சந்து - சந்தனம்.14. கழுநீர் - செங்கழுநீர். செண் - கொண்டை 10. வீங்குதல் பெருத்தல். 17. அருஞ்செயல் - செயற்கரிய செயல்.

விளக்கம்: கண்ணன், யமுனைத்துறையிலே நீராடிய ஆயர்மகளிர் துகில்களைக் கவர்ந்து குருந்த மரத்தேறி ஒளிந்துகொண்டனன். அப்பொழுது பலதேவர் வரவும், அம்மகளிர் ஒருசேரத் தம்மை மறைத்தற்கு வேறு வழியற்றாராக வருந்தக் கண்ணன், அவர் மறையுமாறு குருந்தமரக் கொம்பினைத் தாழ்த்துத் தந்தனன் என்பர். இச் செய்யுள் கண்ணன் திருவிளையாடலைப் பற்றிய செய்திகள் பழந் தமிழகத்துப் பரவியிருந்த பெருக்கத்தினைக் காட்டும்.அந்துவன்பரங்குன்றைப் பாடியது,"மண்மிசை அவிழ்துழாய் என்னும்எட்டாவது பரிபாடல்.

60. அறனில் யாயே!

பாடியவர்: குடவாயிற் கீரத்தனார். திணை: நெய்தல். துறை: தலைமகற்குத் தோழி செறிப்பறிவுறீஇ வரைவு கடாயது. சிறப்பு: பொறையனின் தொண்டியும், சோழர் நாடுதரு நிதி வைத்த குடந்தையும்.

(தலைவனும் தலைவியும் களவிலே ஒழுகி வந்தனர். தலைவியின் புதுப்பொலிவு கண்ட தாய் ஐயுற்றாள். வீட்டை