பக்கம்:அகநானூறு 1, புலியூர்க் கேசிகன்.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மூலமும் உரையும்

புலியூர்க் கேசிகன் ☆ 119


பகைவரின் நாடுகள் திறையாகக் கொடுத்த பெரு நிதிக் குவையைக் காட்டினும், காவல் அதிகமாயிருக்குமாறு, எம்மை அரிய காவற்கு உட்படுத்தி விடுவள் கண்டாய்!

சொற்பொருள்: 1. சேஇறால் - சிவந்த இறால் மீன். 2. கொடுந்தொழில் - உயிர்க் கொலையாகிய கொடிய தொழில். செங்கோல் - நேரிய கோல். 4 நொடைவிற்றுக் கொள்ளல். மூரல் - புளித்த பழஞ் சோறு. 3. அயிலை - அயிரை மீன். 6. மீன் தடி - கருவாட்டுத்துண்டு. 9. ஊதை - வாடை. 11. ஒரை - மகளிர் விளையாட்டு. 12. கொன்னும் - வீணே. சிவப்பு - சினம்.15. கடி - காவல், அறனில் யாய் - தன் இளமையிலே காதல் கொண்டு ஒழுகினவளாகியும், தன் மகளை இற்செறித்தலால், அறனற்றாள் என்றனள்.

உட்பொருள்: "தந்தை மீன்பிடித்துக் கொணரும் முன்னேயே, தந்தைக்கு உப்புவிற்ற பொருளால் சோறும் கறியும் ஆக்கிக் கொணர்பவர் எம் இளமகளிர். அதுபோல, நீவிர் வரைந்துவந்து கொள்வதற்கு முன்பே, யாமும் அறத்தோடு நின்று முயல்வோம்’ என்பதாம்.

61. பொதினி அன்ன வனமுலை!

பாடியவர்: மாமூலனார். திணை: பாலை துறை: தலைமகன் பொருள்வயிற் பிரிய, வேறுபட்ட தலைமகட்குத் தோழி சொல்லியது. 'தன் சாதிக்கு ஏற்பத் தலைவன் புகழும் மானமும் எடுத்து வற்புறுத்தலைத் தோழி கூறினாள் என்பர். நச்சினார்க் கினியர்.

சிறப்பு:வேங்கடமலைக்குத் தலைவனான கள்வர் கோமான் புல்லி, அவன் வணக்கிய மழவர்நாடு; நெடுவேள் ஆவியர் கோமானின் பொதினி மலை.

(நெஞ்சிலே பொருளார்வம் மிகுதியாகத்தன் காதலியைப் பிரிந்துவேற்றுநாட்டிற்குச் சென்றான் தலைவன். குறித்த நாளிலே அவன் வரவில்லையெனத் தலைவி கலங்கினாள். அவன் போன இடத்திலேயே தன்னை மறந்து தங்கி விட்டானோ?’ எனப் புலம்பினாள். அவளைத் தெளிவிக்கத் தோழி கூறுகின்றாள்.)

"நோற்றோர் மன்ற தாமே கூற்றங்
கோளுற விளியார், பிறர்கொள விளிந்தோர்'எனத்
தாள்வலம் படுப்பச் சேட்புலம் படர்ந்தோர்
நாள்இழை நெடுஞ்சுவர் நோக்கி, நோய்உழந்து
ஆழல் வாழி, தோழி! - தாழாது,

5