பக்கம்:அகநானூறு 1, புலியூர்க் கேசிகன்.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூலமும் உரையும்

புலியூர்க் கேசிகன் ☆ 121


போன்றன. ஒளிவிளங்கும் நின் அழகிய முலைகள். அவற்றாற் சிறப்புற்ற, நுண்ணிய பூண் அணிந்த நின் மார்பகத்தைப் பொருந்துதலை மறந்து, அவர் அங்குப் பழகியிருப்பார் ஆதலே அரிதாகும்.

சொற்பொருள்: 1. நோற்றார். நோன்பு செய்தவர்.2 கோளுற - கோடல் உற, முதுமைபெற்றுச் சாவதினும் விழுப்புண் பெற்றுச் சாவது சிறப்பு என்பர் வீரர்கள். தலைவன் வேந்துவினை முடித்தற் பொருட்டுச் சென்றமை இதனால் பெறப்படும். 3. தாள் முயற்சி. 5. ஆழல் - அழுந்தாதே. மழபுலம் - மழவர் நாடு; அதியர்கள் வாழ்ந்த தமிழகப் பகுதி.16. பொதினி - பழனிமலை.7. 'வன்சிலை,வார்சிலை எனவும் பாடம்.பழனிமலை தன் உருவொப் பால் முலைக்கு உவமையாயிற்று என்க. பொதினி - பழனி. விளக்கம்: 'நாள் இழை நெடுஞ்சுவர் நோக்கி மகளிர் நோய் உழைக்கும் நிலையினர் என்னும் செய்தியை இச் செய்யுளால் அறியலாம். -

62. கடவுள் எழுதிய பாவை!

பாடியவர்: பரணர். திணை: குறிஞ்சி. துறை: அல்ல குறிப்பட்டுழித் தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. 'களஞ்சுட்டு கிளவி கிழவியதாகும் என்பதனால், தலைவியால் குறிபெற்றும் தோழியை இரக்கும்’ எனக் கொண்டனர் நச்சினார்க்கினியர். சிறப்பு: கொல்லிமலைச் சாரலிலே சேரன், கடவுள் எழுதிய பாவை சமைத்துப் போற்றியது. இதனைக் கொல்லிப் பாவை என்பர்.

(முதல்நாள், தலைவி அவனுடன் கூடிய காலத்திலே காட்டிய பெருங்கிளர்ச்சி, மறுநாள் குறியிடத்தே வந்தும் அவளைக் காணாத தலைவனின் மனத்திலே நிழலாடுகிறது. இன்றும், இனியும் வரமுடியாதெனக் கருதிப் போலும் அவள் அங்ஙனம் கலந்தனள் என, அவன் தன் நெஞ்சோடு கூறி மயங்குகின்றான்.)

அயத்துவளர் பைஞ்சாய் முருந்தின் அன்ன
நகைப்பொலிந்து இலங்கும் எயிறுகெழு துவர்வாய்,
ஆகத்து அரும்பிய முலையள், பனைத்தோள்,
மாத்தாட் குவளை மலர்பிணைத் தன்ன

மாஇதழ் மழைக்கண், மாஅ யோளொடு
5


பேயும் அறியா மறைஅமை புணர்ச்சி
பூசற் றுடியிற் புணர்வு புரிந்து இசைப்பக்,
கரந்த கரப்பொடு நாஞ்செலற்கு அருமையின்,
கடும்புனல் மலிந்த காவிரிப் பேரியாற்று

நெடுஞ்சுழி நீத்தம் மண்ணுநள் போல,
10