பக்கம்:அகநானூறு 1, புலியூர்க் கேசிகன்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

vi


காரணமோ பொருட் காரணமோ எனிற் பொருட் காரணம் உணர்க.


"நாணகையுடைய நெஞ்சே' என்பது முதலாக, "நாள் வலை” என்பதீறாகக் கிடந்த நூற்றெண்பது பாட்டும் “மணி மிடை பவளம்"; இப்பெயர் உவமையாற் பெற்ற பெயர்; செய்யுளும் பொருளும் தம்முள் ஒவ்வாமையால்,


“வறனுறு” என்பது முதலாக "நகை நன்று” என்பதீறாகக் கிடந்த பாட்டு நூறும் "நித்திலக் கோவை"; இவை செய்யுளும் பொருளும் ஒக்குமாகலின், -


வியமெல்லாம் வெண்டேர் இயக்கங் கயமலர்ந்த தாமரை யாறாகத் தகைபெறீஇக் காமர் நறுமுல்லை நான்காக நாட்டி வெறிமாண்ட எட்டும் இரண்டுங் குறிஞ்சியாக் குட்டத்து இவர்திரை பத்தா இயற்பட யாத்தான் தொகையின் நெடியதனைத் தோலாச் செவியான் வகையின் நெடியதனை வைப்பு.