பக்கம்:அகநானூறு 1, புலியூர்க் கேசிகன்.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூலமும் உரையும்

புலியூர்க் கேசிகன் ☆ 127


பேராசிரியர். அன்னை சொல்லும் பெண்டிர் கெளவையும் தலைவரும் விழுமம்' என்று தலைவிக்குத் தோழி கூறினாள்' என்றும், 'அம்பலும் அலரும் அஞ்சிப் போக்கு உடன்பட்டது. என்றும் நச்சினார்க்கினியர் கூறுவர். உடன் போக்கு நயப்பித்தது என்பர் இளம்பூரணர். சிறப்பு: நாடு கண் அகற்றிய உதியஞ் சேரலாதன்.

(களவுப் புணர்ச்சியிலே ஈடுபட்டு இருந்தனர் ஒரு காதலனும் காதலியும். அதனால் ஊரலர் அதிகமாயிற்று. அன்னையின் சொல்லும் கடுமையாயிற்று. அவள் துடிதுடித்தாள். இந்நிலையிலே, தலைவன் அவளோடு உடன்போக்கிலே செல்லப் போவதாக முடிவு செய்துவிட்டான். அந்தச் செய்தியைக் கூறித் தலைவியோடு மகிழ்கின்றாள் தோழி)

உன்னங் கொள்கையொடு உளம்கரந்து உறையும்
அன்னை சொல்லும் உய்கம்; என்னதுஉம்
ஈரம்சேரா இயல்பிற் பொய்ம் மொழிச்
சேரிஅம் பெண்டிர் கெளவையும் ஒழிகம்

நாடுகண் அகற்றிய உதியஞ் சேரற் .
5


பாடிச் சென்ற பரிசிலர் போல
உவஇனி - வாழி, தோழி! அவரே,
பொம்மல் ஓதி! நம்மொடு ஒராங்குச்
செலவு அயர்ந்தனரால் இன்றே - மலைதொறும்

மால்கழை பிசைந்த கால்வாய் கூர்எரி,
10


மீன்கொள் பரதவர் கொடுந்திமில் நளிசுடர்,
வான்தோய் புணரி மிசைக்கண் டாங்கு,
மேவரத் தோன்றும் யாஅஉயர் நனந்தலை
உயவல் யானை வெளிநுச்சென் றன்ன

கல்ஊர்பு இழிதரும் புல்சாய் சிறுநெறிக்,
15


காடுமீக் கூறும் கோடுஏந்து ஒருத்தல்
ஆறுகடி கொள்ளும் அருஞ்சுரம், 'பனைத்தோள்,
நாறுஜங் கூந்தல், கொம்மை வரிமுலை,
நிரைஇதழ் உண்கண், மகளிர்க்கு

அரியவால் என அழுங்கிய செலவே!
20

பொலிவுற்ற கூந்தலை உடையவளே! எம் தோழியே! நீ வாழ்வாயாக!

மலைதோறும் பெரிய மூங்கில்கள் ஒன்றுடன் ஒன்று உரசிக் கொள்ளும். அதனால் எழுந்த தீச்சுடர்கள், காற்று வீசுவதனால், எங்கும் மிக்க எரிபரக்கச் செய்யும். மீன் பிடிப்பவரான பரதவர்களது வளைந்த படகிலே தோன்றும் மிக்க தீச்சுடர்கள்.