பக்கம்:அகநானூறு 1, புலியூர்க் கேசிகன்.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

130

அகநானூறு - களிற்றியானை நிரை

பகைவரும் விரும்பும் குற்றமற்ற அழகினையுடைய சிறுவர்களைப் பெற்ற தலைமையினை உடையோர், இவ்வுலகத்தே புகழோடும் விளக்கமுறுவர்; மறுமை உலக வாழ்வினையும் குற்றமின்றி எய்துவர். இவ்வாறு சான்றோர் பலரும் கூறிய பழமொழிகள் பல. இவையெல்லாம் வாய்மையே ஆகுதலைக் கண்கூடாக யாமும் காணப்பெற்று விட்டோம். எங்ஙனமெனில்,

மலர் வரிசையாலாகிய தாரினை அணிந்த மார்பினன் நம் தலைவன். அவன், நேற்றுப் பரத்தை ஒருத்தியோடு வதுவை அயர்தலை விரும்பினான். புதுவதாக இயன்ற ஒப்பனைகளையும் செய்து கொண்டான். இத் தெருவினைக் கடந்தும் செல்லலுற்றான்.

மாட்சியுற்ற செல்லுந் தொழிலாற் சிறந்த அவனது குதிரையின் மணியானது ஒலிக்க, அதனைக் கேட்டதும், எம்.வீட்டுத் தலைவாயிலைக் கடந்து சென்று, அவனைக் காண்கின்ற விருப்பத்துடன் தளர்ந்து தளர்ந்து ஓடிய, அழகிய கண்களையுடைய எம் புதல்வனை அவன் நோக்கினான்.

'வலவனே! நீண்ட தேரினை நிறுத்துக!' என்றனன். தேர் நின்றதும், அதனின்றும் இறங்கினன். சற்றும் தாழ்க்காது, புதல்வனுடைய பவளமணி போன்ற செவ்வாய் தனது மார்பகத்தே பொருந்துமாறு எடுத்துத் தழுவிக் கொண்டான். அதன்பின், 'பெருமானே, இனி வீட்டிற்குள் செல்வாயாக என விடுவிக்கவும், புதல்வன் அதற்கு இசையானாகி அழுதனன். அங்ஙனம் தன் போக்கைத் தடுத்த மகனோடு, பெருஞ் செல்வத்துக் குரியோனான குபேரனைப் போலத் தலைவனும் மிடுக்குடன் வீட்டினுள் வந்தனன்.

யான் அதனை செய்வித்தேன் ஆகுதற்கு நாணினேன். “இக்கொடிய மகன் இடித்து இவன் கலங்கினன் போலும் என எண்ணினேன். அடிக்குங் கோலோடு சென்று, எம் மகனை அணுகினேன். அப்போது அவன், மகனைத் தன்பால் அணைத்துக் கொண்டான்.

வதுவை நிகழும் அப்பரத்தையர் மனையிலே, ஒலிக்கும் கண்ணினையுடைய முழவின் இனிய ஓசையானது, அவனை அழைப்பதுபோலவே வந்து இசைத்தது. அதனாலும் அவன் தன் மகனை விட்டுவிடவில்லை. முன்பு ஒருநாள், கழங்காடும் ஆயத்தாரிடையே நமக்கு அருள் செய்த பழைய கண்ணோட்டமும் அழியுமாறு, அன்று தொடங்கிய தன் புதுமணத்தையும் அவன் நிறுத்திவிட்டனன் அல்லனோ?

சொற்பொருள்: வாய்த்தனம் - வாய்மையெனக் கண்டனம் 13. தாங்காது - தாமதியாது. 16 - 18 தடுத்த மாநிதிக் கிழவனும்