பக்கம்:அகநானூறு 1, புலியூர்க் கேசிகன்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



அகநானூறு
களிற்றியானை நிரை
மூலமும் உரையும்
சிவபிரான் வாழ்த்து

(யாவராலும் அறிதற்கு அரியவன் சிவபெருமான். அவன் உயிர்களின் மீது கருணை கொண்டவனாகத், தன் உருவத் திருமேனி காட்டியும் வந்து அருள்வான். இது பொருளாக, அவனுடைய உயர்வையும், ஆற்றலையும், அவன் உமா மகேசனாகக் காட்சி தருகின்ற சிறப்பினையும் கூறி, அவனைப் போற்றுவது இது)


கார்விரி கொன்றைப்; பொன்னேர் புதுமலர்த்
தாரன் மாலையன் மலைந்த கண்ணியன்;
மார்பி னஃதே மைஇல் நுண்ஞாண்;
நுதலது இமையா நாட்டம்; இகல்அட்டுக்,
கையது கணிச்சியொடு மழுவே; மூவாய் 5


வேலும் உண்டு.அத் தோலா தோற்கே;
ஊர்ந்தது ஏறே; சேர்ந்தோள் உமையே -
செவ்வான் அன்ன மேனி, அவ்வான்
இலங்குபிறை அன்ன விலங்குவர்ல் வைஎயிற்று,
எரியகைந் தன்ன அவிர்ந்து விளங்கு புரிசடை 10


முதிராத் திங்களொடு சுடரும் சென்னி,
மூவா அமரரும் முனிவரும் பிறரும்
யாவரும் அறியாத் தொன்முறை மரபின்,
வரிகிளர் வயமான் உரிவை தைஇய,
யாழ்கெழு மணிமிடற்று, அந்தணன் 15

தாவில் தாள்நிழல் தவிர்ந்தன்றால் உலகே.

கார்காலத்தில் கட்டவிழ்ந்து மலரும் கொன்றையின் பொன்னைப் போன்ற புதுமலர்களினால் சேர்த்த தாரினை உடையவன்; கட்டிய மாலையினை உடையவன்; தொடுத்த கண்ணியினையும் உடையவன் சிவபிரான். குற்றம் இல்லாத நுண்மையான பூணுால் அவன் மார்பினிடத்தே விளங்கும். அவன் நெற்றியிடத்தோ இமையாத கண்; அவன் கைகளில் விளங்குவனவோ குந்தாலியும் மழுவாயுதமும், அவை, பகைவரை