பக்கம்:அகநானூறு 1, புலியூர்க் கேசிகன்.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூலமும் உரையும்

புலியூர்க் கேசிகன் ☆ 143


நின்நோய்த் தலையையும் அல்லை; தெறுவர
'என்ஆகுவள்கொல், அளியள் தான்? என,
என்அழிபு இரங்கும் நின்னொடு யானும்
ஆறுஅன்று என்னா வேறுஅல் காட்சி

இருவேம் நம்படர் தீர வருவது
10


காணிய வம்மோ - காதல்அம் தோழி!
கொடிபிணங்கு அளில இருள்கொள் நாகம்
மடிபதம் பார்க்கும், வயமான் துப்பின்,
ஏனல்அம் சிறுதினைச் சேணோன் கையதைப்

பிடிக்கை அமைந்த கனல்வாய்க் கொள்ளி
15


விடுபொறிச் சுடரின் மின்னி அவர்
சென்ற தேஎத்து நின்றதால் மழையே.

என் அன்பு மிகுந்த தோழியே! அவர் சென்ற நாட்டினிடத்தே.

கொடிகள் பின்னிக் கிடக்கும் சிறு காட்டினிடத்திலேயுள்ள இருண்ட கருநிறம் உடைய யானையானது சோர்கின்ற பதத்தைத், தினைவகையினுள் ஒன்றாகிய சிறுதினையைக் காத்திருக்கும், வலியுள்ள சிம்மம்போன்ற வலிமையுடைய பரண்மேலுள்ளவன் பார்த்திருப்பான். பிடி கையின் கண் பொருந்திதும், தீவாய் தலையிலே உள்ளதுமான கொள்ளிக் கோல் அவன் கையிலே உள்ளதாயிருக்கும். அது வீசப்படும் போது விழும் சுடர்ப்பொறிகளைப் போல, மழையானது மின்னலிட்டுக் காலூன்றிப் பெய்து நின்றது.

பின்புறமாக முடிந்து போட்டிருக்கும் ஒப்பனை செய்யாத கொண்டையிலே, நெய் கனிய வீழும் குழலினை ஒருசேரக் கட்டி, வெருகுப் பூனையானது இருளிலே நோக்கினாற் போல ஒரு வடத்தாலாகிய முத்துமாலையானது முல்ைகளிடையிலே கதிர்விட்டு விளங்க, அருந்ததி போலுற்ற கற்பினால் மடப்பம் மிகுந்தவளாக, மெலிந்து, நின் நோயளவிலேயே நீ வருந்தி நிற்பவளும் அல்லை. w. “அச்சமுற இரங்கத்தக்கவளாகிய இவள்தான் என்னா குவளோ? என்று,என்னுடைய அழிவுக்கண்டும் இரங்கா நின்றனை அங்ங்ணம் இரங்கும் நின்னோடு, யானும் வருந்துதல் நெறியன்று என்று சொல்லாத, வேறுபாடற்ற காட்சியினளாவேன். நம் இருவேமுடைய வருத்தமும் தீருமாறு நம் தலைவர்கள் வருதலை எதிர்சென்று காணுதற்கு எழுந்து வருவாயாக!

சொற்பொருள்: 1. பின்னுதல் - மண்ணுதல். மண்ணாமை - கை செய்யாமை. 2. நெய் - மணநெய். 5. அணங்கு - தேவமகள்;