பக்கம்:அகநானூறு 1, புலியூர்க் கேசிகன்.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூலமும் உரையும்

புலியூர்க் கேசிகன் ☆ 147


துணிந்த பொருளற்ற அறிவினையுடைய, வலிமிக்க உள்ளத்தால் சோர்தல் இல்லாது, நம் காதலரும் செல்வாராயின்,

'நல்ல அழகிய நெற்றியினையும், குற்றமற்ற கொள்கை யினையும், சிலவாகிய சொற்களையும், பவள வாயினையும், விளங்கும் வளையணிந்த முன்கையினையும் உடையவர் மகளிர்கள்; அவர்களது முத்தாரம் தாங்கிய பரந்த முலை களையுடைய மார்பகத்து, அமையாத காதலொடு, தங்கள் தாரை இடையே குழையச் செய்யாது சென்றொழிந்த மிக்க அழகினை நினைந்து என்றும் இரங்குபவராவர்; அஃதல்லாது, “இவ்வுலகத்தே பெயர்த்தும் அவ்வழகினைத் தருபவரும் உளரோ?” என்று, இங்ஙனம் மனம் வெதும்பிப் பலவும் கூறினை: அமையாத நோயுடையையும் ஆயினை; அஃதாகவும், யான் அரிதாகப் பெற்ற சிறப்பினையுடைய நின்னிடத்தினின்றும் பிரியுமாறு கருதுதலும் உண்டாமோ? (அஃதில்லை; என்றும் இல்லை எனத் தெளிவாயாக)

சொற்பொருள்: 1. ஆள்வினை - முயற்சி. பிரிவினால் தான் கேடுறுவது பற்றி அருள் கொள்ளவில்லை யாதலின், அருளன்றாக என்றனர். 2. வலித்த - துணிவித்த, 4. எரிசினம் - எரிக்கிற சினம்; சினம் - நெருப்பு: 5 கரிகுதிர் மரம் - கரிந்த குதிர் போலும் மரம், 13 குழைதல் - துவள்தல்.

விளக்கம்: தோழி கூற்றாயின், மெல்லியற் குறுமகளே! நீ பலபுலந்து கூறி நோயையாகவும், அவர் பிரியச் சூழ்தலும் உண்டோ? அவர் பிரியார்காண்’ என உரைத்தனள் என்க.

76. காவிரிபோலக் கைவலித்தல்!

பாடியவர்: பரணர். திணை: மருதம், துறை: தலைமகளை நயப்பித்துக் கொண்டாள்" என்று கழறக் கேட்ட பரத்தை, தலைமகட்குப் பாங்காயினார் கேட்பச் சொல்லியது.

'தலைவனின் காமக்கிழத்தியாகிய இளமைப் பருவத்தாள் ஒருத்தி, தன்பால் தலைவன் வருவதுபற்றித் தலைவி புலந்ததாகக் கேட்டவழிப், பெருமிதம் கொண்டு கூறியதாகும்’ என்பர் நச்சினார்க்கினியர்.

சிறப்பு: ஆட்டனத்தியைக் கண்டிரோ என ஆதிமந்தி பேதுற்றமை, அஃதை என்பானின் நாளோலக்கச் சிறப்பு.

('பரத்தையர் சேரியிலே ஒருத்தியின் கூத்திலே மயங்கினான் தலைவன்’ எனக் கேட்டு, அப்பரத்தையைப் பழித்து அவனோடு ஊடினாள் தலைவி. அதனைக் கேட்ட அப்பரத்தை, அவன் கூத்துக்காண வந்ததற்கே என்னைத் தூற்றினளோ? இனி, அவள்,