பக்கம்:அகநானூறு 1, புலியூர்க் கேசிகன்.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூலமும் உரையும்

புலியூர்க் கேசிகன் ☆ 151


தெளிவு நடத்தி வந்தனர். முடிவு கூறுவோர், பானையிலிருந்து ஓலையை உருவி எடுத்தல்போலப் பருந்து குடரை உருவும் என்க, 'ஆவணமாக்கள்’ என்னும் அலுவலர்களைப் பற்றிய செய்தியையும் அறிக.

78. உள்ளியும் அறிதிரோ?

பாடியவர்: மதுரை நக்கீரனார். திணை: குறிஞ்சி. துறை: களவுக்காலத்துப் பிரிந்துவந்த தலைமகற்குத் தோழி சொல்லியது. சிறப்பு: மூவேந்தரும் பாரியின் பறம்புமலையை முற்றியிருப்பக் கபிலருடன் தன் எல்லையைக் காத்த பாரியின் சிறப்பு.

(களவிலே இடையீடுபடும் பிரிவினால் வாடிமெலிந்தாள் ஒரு தலைவி. அவள் காதலனிடம், அவளுடைய மெலிவைக் கூறுதல் மூலம், அவளை வரைந்து கொள்ளத் தூண்டும் முயற்சியிலே ஈடுபடுகிறாள் தோழி)

'நனந்தலைக் கானத்து ஆளி அஞ்சி,
இனம்தலைத் தரூஉம் எறுழ்கிளர் முன்பின்,
வரிஞ்மிறு ஆர்க்கும், வாய்புகு கடாஅத்துப்
பொறிநுதற் பொலிந்த வயக்களிற்று ஒருத்தல் இரும்பினர்த் தடக்கையில், ஏமுறத் தழுவ, 5

கடுஞ்சூல் மடப்படி நடுங்கும் சாரல்,
தேம்பிழி நறவின் குறவர் முன்றில்
முந்துழ் ஆய்மலர் உதிரக், காந்தள்
நீடுஇதழ் நெடுந்துடுப்பு ஒசியத், தண்ணென
வாடை தூக்கும் வருபனி அற்சிரம், 10

நம்இல் புலம்பின், நம் ஊர்த் தமியர்
என்ஆ குவர்கொல் அளியர் தாம்?'என
எம்விட்டு அகன்ற சின்னாள், சிறிதும்,
உள்ளியும் அறிதிரோ - ஓங்குமலை நாட!
உலகுடன் திரிதரும் பலர்புகழ் நல்இசை 15

வாய்மொழிக் கபிலன் சூழச் சேய்நின்று
செழுஞ்செய்ந் நெல்லின் விளைகதிர் கொண்டு,
தடந்தாள் ஆம்பல் மலரொடு கூட்டி,
யாண்டுபல கழிய, வேண்டுவயிற் பிழையாது,
ஆள்இடூஉக் கடந்து, வாள்.அமர் உழக்கி, 20

ஏந்துகோட்டு யானை வேந்தர் ஓட்டிய
நெடும்பளிப் புரவிக் கைவண் பாரி