பக்கம்:அகநானூறு 1, புலியூர்க் கேசிகன்.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

154

அகநானூறு -களிற்றியானை நிரை

          ஆடுதொறு கனையும் அவ்வாய்க் கடுந்துடிக்
          கொடுவில் எயினர் கோட்சுரம் படர
          நெடுவிளி பயிற்றும் நிரம்பா நீள்இடை, 15

          கல் பிறங்கு அத்தம் போகி
          நில்லாப் பொருட்பிணிப் பிரிந்த நீயே!

என் நெஞ்சமே! நீ வாழ்வாயாக!

ஆடுந்தோறும் ஒலிமுழங்கும் அழகிய முகப்பினையுடைய துடியினையும், வளைந்த வில்லினையும் உடையவர் எயினராகிய பாலைநிலத்து மறவர்கள். வழிச்செல்வாரைக் கொள்ளையிடும் கருத்துடன், அவர்கள் சுரநெறியிலே எங்கணும் பரவியிருப்பர்.

பெரிய சிறையினையும் வனைந்த வாயினையும் உடைய பருந்தினது, வெண்மையான கண்களையுடைய பேடையானது, தன். சேவலை நினைந்து, நெடுங்குரல் எழுப்பிக் கூப்பிட்டுக் கொண்டே இருக்கும், நீண்ட பெருவழி அது. கற்கள் பரவிக்கிடக்கும், அந்தக் காட்டின் வழியே சென்று, ஓரிடத்திலேயும் நில்லாத இயல்பினையுடைய பொருளின் மீது கொண்ட பற்றினால், நீ எம் தலைவியையும் பிரிந்தனை!

தோளிலே தொங்கவிடும் சோற்று முட்டையினையுடைய, வலிய கையினரான ஆடவர்கள், தொழில் செய்தலிலேயே முனைந்து, மிக்க தீப்பொறிபறக்குமாறு, பாறைகளைத் தகர்த்துத் தோண்டுதுலைச் செய்து இயற்றிய, மிக்க உவர் நீரையுடைய கிணற்றிலே, பாறையினை உடைத்த பக்கத்திலே ஊறிக்கிடக்கும் நீரினை உண்ணுதலை விரும்பியவாக, ஒலிக்கும் மணிபூண்ட ஆயமாகிய கொங்கர்களது பசுமந்தைகள், தம் தலைகளை நிமிர்த்தவாறே ஆரவாரத்துடன் சென்று கொண்டிருக்கும். வன்புலமானது தூளெழும்படியாகச் சென்று, அவை கிளப்பிய செம்மண்ணாகிய நிறம் பொருந்திய புழுதியானது, அகன்ற பெரிய வானத்தினிடத்தே மண்டித் தோன்றும். அத்தகைய இடமகன்று கிடக்கும் காட்டிலே

நம்மோடும் துணையாகக் கூடி, வல்லபடி உடன் வருவோம் என்றில்லாமல், இவ்வாறு இங்கு வந்தவிடத்திலே, அவளையே நினைந்து நினைந்து வருந்துகின்றனையே! இஃது என்னையோ?

சொற்பொருள்: 1. தோட்பதன் - தோளிலே தொங்கவிடும் சோற்று மூட்டை கருங்கை - வலிய கை, 2. கனை பொறி - மிக்க பொறிகள். நூறி - வெட்டி, 3. கல்லுறுத்தல் - தோண்டுதல். வல்லுவர் - மிக்க உவர்; படு கிணறு. 4. ஊறல் - ஊறிவரும் நீர். 5. துமிய துகள் எழ, 9 அழுவம் - காடு. 10. அல்குவர - இங்கே தங்குதல் அமைந்த 12. வான்கண் - வெள்ளைக்கண். 8. ஊன்றித்