பக்கம்:அகநானூறு 1, புலியூர்க் கேசிகன்.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூலமும் உரையும்

புலியூர்க் கேசிகன் ☆ 155


தோன்றும் மிக்குத் தோன்றும்.1.தோட்பயன் அமைத்த என்று பாடமாக்கித், தோண்டுகை முன்பே நீரைச் சொரிந்தமைத்த என்றுமாம். -

விளக்கம்: 'எயினர் கோட்சுரம் படரப் பேடை நெடு விளி பயிற்றும்; அவ்வழிச் செல்லுதலினால் தன் தலைவியும் தன்னை நினைந்து வருந்தித் துயருறுதல் பொருந்துவதே எனத் தலைவனின் மனம் உளைந்தது என்க.

80. பகல் வந்து ஈமே!

பாடியவர்: மருங்கூர் கிழார் பெருங்கண்ணனார், நக்கீரனார் பாடியது எனவும் பாடம் திணை: நெய்தல். துறை: இரவுக்குறி வந்த தலைமகற்குத் தோழி சொல்லியது.

(நெய்தற் பாங்கிலே, தன் காதலியைச் சந்திக்க இரவு வேளையிலே வருகிறான் ஒருவன். அவனுடைய காதலியோ வழியின் கொடுமையை நினைந்து நடுங்கினாள். அதனை மறைத்துப் பகலிலே வருமாறு தோழி தலைவனிடம் கூறுகிறாள்.)

கொடுந்தாள் முதலையொடு கோட்டுமீன் வழங்கும்
இருங்கழி இட்டுச்சுரம் நீந்தி,
இரவின் வந்தோய் மன்ற - தண்கடற் சேர்ப்ப!

நினக்குஎவன் அரியமோ, யாமே? எந்தை ...
5


பல்மீன் உணங்கற் படுபுள் ஒப்புதும்
முண்டகம் கலித்த முதுநீர் அடைகரை
ஒண்பன் மலரக் கவட்டுஇலை அடும்பின்
செங்கேழ் மென்கொடி ஆழி அறுப்ப

இனமணிப் புரவி நெடுந்தேர் கடைஇ,
10


மின்இலைப் பொலிந்த விளங்கினர் அவிழ்பொன்
தண்நறும் பைந்தாது உறைக்கும்
புன்னை.அம் கானல், பகல்வந் தீமே!

குளிர்ந்த கடற்கரையினை உடைய தலைவனே!

வளைந்த காலினையுடைய முதலைகளோடு, கொம்பினை யுடைய சுறாமீன்களும் இயங்கும், உப்பங்கழிகள் நெருங்கிக் கிடக்கும், அரிய வழியினைக் கடந்து, இந்த இரவு நேரத்திலேயும் நீ வந்துள்ளனை!

நீர் முள்ளிகள் தழைத்துக் கிடக்கும் கடலின் அடைகரை யிலேயுள்ள, ஒள்ளிய பலவாகிய மலர்களையுடைய, கவடு பட்ட இலைகளையுடைய அடம்பினது சிவந்த நிறமுடைய மெல்லிய கொடிகளை, நின் தேருருள்கள் அறுத்துக் கொண்டே வரும்.