பக்கம்:அகநானூறு 1, புலியூர்க் கேசிகன்.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூலமும் உரையும்

புலியூர்க் கேசிகன் ☆ 161


கருதியும், அங்கேயே இராது, அன்பு மிகவும் செலுத்துவதாக, நாம் அடையுமாறு நம்மிடத்தேயும் அணுகவந்தன, காண்பாயாக!

சொற்பொருள்: 2. உளைமயிர் - தலையாட்டம் போலத் தொங்கும் மயிர். 6. பெரும்பொழி - பெரிதாக உரித்த உரி. 7. நியமம் - அங்காடி 8. பதவு முதல் - வாயிலிடம் 13 நிகர் - ஒளி.

விளக்கம்: பிடியானை கதறக் கன்றினைப் பிரித்து வந்து கள்விலையாகத் தரும் கல்லா இளைஞர்கள்போல, காதலி துயருற்றுப் புலம்புமாறு பிரிந்துவந்து, பொருள் வேட்கையாற் செல்லுகின்ற அறிவற்றவன் ஆயினேன் என, அவன் தன் நெஞ்சத்தே நினைந்து வருந்தினான் என்க.

84. சீறுரும் பாசறையும்!

பாடியவர்: மதுரை எழுத்தாளன். திணை: முல்லை. துறை: தலைமகன் பாசறையிலிருந்து சொல்லியது. 'தூது கண்டு கூறியது என்பர், நச்சினார்க்கினியர்.

(அவன் குறுநில மன்னன்; பேரரசனுக்குப் படைத்துணை யாகச் சென்றிருந்தான். தலைவியைத் தான் பிரிந்த காலத்துக் 'கார் காலத்துத் தொடக்கத்து மீள்வதாக உறுதி கூறித்தான் சென்றனன் எனினும், எதிர்பார்த்தபடி போர் முடிவு பெறாததனால், அவனாற் போக முடியவில்லை. பாசறையிலே , யிருந்து, தன் மனைவிக்குத் தூதன் ஒருவனை அனுப்புகின்றான். அப்போது அவனிடம் கூறியது.)

மலைமிசைக் குலைஇய உருகெழு திருவில்
பணைமுழங்கு எழிலி பெளவம் வாங்கித் '
தாழ்பெயற் பெருநீர், வலன்ஏர்பு வளைஇ,
மாதிரம் புதைப்பப் பொழிதலின், காண்வர

இருநிலம் கவினிய ஏமுறு காலை
5


நெருப்பின் அன்ன சிறுகட் பன்றி,
அயிர்க்கட் படாஅர்த் துஞ்சுபுறம் புதைய,
நறுவி முல்லை நாண்மலர் உதிரும்,
புறவு அடைந் திருந்த அருமுனை இயவிற்

சீறு ரோளே, ஒண்ணுதல்! - யாமே,
10


எரிபுரை பன்மலர் பிறழ வாங்கி,
அரிஞர் யாத்த அலங்குதலைப் பெருஞ்சூடு
கள்ஆர் வினைஞர் களந்தொறும் மறுகும்
தண்ணடை தழிஇய கொடிநுடங்கு ஆர்எயில்

அருந்திறை கொடுப்பவும் கொள்ளான், சினம்சிறந்து,
15