பக்கம்:அகநானூறு 1, புலியூர்க் கேசிகன்.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

164

அகநானூறு - களிற்றியானை நிரை

அல்லர்” என்று பலபல கூறித், தனிமைத் துயரிலே அழுந்தாதே கொள்!

ஈன்ற அணிமையினைக் கழிந்ததும், மெல்லென நடப்பதுமாகிய, தன் இளைய பிடியினதும் கன்றினதும் பசியினைப் போக்குவதற்குப், பசிய கண்ணினையுடைய களிறானது, மலைச் சாரலிலேயுள்ள முற்றாத மூங்கில் முளைகளைத் தேடிக் கொணர்ந்து, அவற்றை உண்பிக்கும், வெற்றி பொருந்திய வேலினையுடைய திரையனது, அத்தகைய வேங்கடமென்னும் நெடிய வரையினிடத்தே, நல்ல நாட்களிலேயே பூத்திருக்கின்ற, மிக இளைய வேங்கை மரத்தினது நறுமலர்களிலே ஆடிய, பொறிகளுடன் கூடிய வரிகளையுடைய மயிலானது, தேனையுடைய பசுமையான குருத்தமரத்தின் மணம் நாறும் கிளையிலேயிருந்து, தன் துணையை ஆர்வமுடன் அழைத்துக் கூப்பிட்டுக் கொண்டே இருக்கும். அத்தகைய குளிர்ச்சி மிகுந்த கார்காலத்திலே யாம் வந்துவிடுவோம் என நம் காதலர், நம்மிடத்தே தெளிவித்த பருவமும் இது ஆகும். அதனைப் போல அதோ மழையும் பெய்கின்றது; அதனைக் காண்பாயாக! (அவர் வருவர்; நீ ஆற்றியிருப்பாயாக என்க.)

சொற்பொருள்: 1. தோள் நெகிழவும்-தோள் மெலிதலால் தோள்வளை நெகிழவும், 2. உண்ணா உயக்கம்-பட்டினியால் வந்த மெலிவு 6. நாள் உலந்த நாள் முடிந்த 10 நாகிள வேங்கை-மிக்க இளமையினுடைய வேங்கை. 11. ஆடிய-அனைத்தாடிய. 13. பயிர்ந்தகவும்-அழைத்தக் கூப்பிடும்: 'துணையை அழைத்தல்' பிரிவு தாளாது, தன்னைக் கூடி மகிழ்விக்க வருமாறு உருக்கத்துடன் கூவி அழைத்தல். இப்பாட்டு எதிர்காலம் நோக்கிற்று என்றறிக. -

விளக்கம்: வேங்கட மலையிலே, களிறு, பிடிக்கும் கன்றுக்கும் உணவுதேடித் தந்து நிற்பதையும், மயில் தன் துணையைத் தேடி அகவிக் கொண்டிருப்பதையும், வேங்கை பூத்ததால் மணம் பெறுங்காலம் வந்தது என்பதையும், அவனும் உணர்வான், அதனால் விரைந்து வருவான் என்க. இதனால், களவினிடையிலே விரைந்து பொருள்தேடி வந்து வரைந்து : கொள்வேனெனப் போயினவன், வரக் காலந் தாழ்க்க வருந்திய காதலிக்குத், தோழி, அவன் வந்து வரைவான்’ என உறுதி கூறியது என்க. களிறு பிடிக்கும் கன்றுக்கும் உணவு தந்து பேணுகின்ற நிலையும், அவனை இல்லற இன்ப நினைவிலே ஈடுபடுத்தும் என்க. காரணம், வரைந்து கொண்டன்றி அத்தகைய இணைந்த வாழ்வினைப் பெறமுடியாத நிலைமையால்.