பக்கம்:அகநானூறு 1, புலியூர்க் கேசிகன்.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

168

அகநானூறு - களிற்றியானை நிரை



பேராசிரியர், அகமலியுவ.. யோளே என்பது, சிதைவு பிறர்க்கின்மை என்னும் மெய்ப்பாட்டிற்கு உதாரணமாகும் என்பர். இது, "தலைமகன் அறிய மெய்ப்பட்டது என்பது' என்றும் கூறுவர். ‘தமர்தர, ஒரிற்கூடி யுடன்புணர் கங்குல்' என்பது, 'தமரிற் பெறுதல் என்றும் உரைப்பர்.

இந்த மணவிழாவிலே, சிலப்பதிகாரத்துப்போல 'மாமுது பார்ப்பான் மறைவழி காட்டிய நிகழ்ச்சி ஏதும் இல்லை. நல்ல நாள் பார்த்தல், புத்தாடை உடுத்தல், பெருஞ் சோறளித்தல், மங்கல மகளிர் வாழ்த்தல், தமர் அளித்தல் போன்றவைகளே நிகழ்ந்துள்ளன.

“பண்டு நிகழ்ந்தது சொல்லி இன்புற்றது' எனும்போது, அதற்கேற்றவாறு கூட்டிப் பொருளுரைத்துக் கொள்க.

87. நனி நீடு உழந்தனை!

பாடியவர்: மதுரைப் பேராலவாயர் திணை: பாலை, துறை: (1) வினைமுற்றி மீளும் தலைமகன் இடைச்சுரத்துத் தன் நெஞ்சிற்குக் கூறியது. (2) இடைச்சுரத்து மீளலுறும் நெஞ்சிற்குத் தலைமகன் சொல்லியது.

((l)வினைமுற்றி வீடுதிரும்பும் தலைமகன், தான் சுரநெறியாலும் பிரிவாலும் பட்ட துயரங்கள் தீர்ந்தன; இனிப் பிரியாது இன்புறுவோம் எனச் சொல்லுகின்றான். (2) இடைசுரத்திலே, நெஞ்சம் தன் தலைவியை நினைக்க, ‘நான் இவ்வாறு வருந்தி வழிநடக்கும் காலத்து, என்னோடு துணை நிற்காமல், நெஞ்சமே, நீ அவளையே நினைத்தாயோ? அவளுடன் சேர்ந்து நீ மகிழ்வாயாக!” எனக் கூறினான் எனவும் கொள்க)

          தீந்தயிர் கடைந்த திரள்கால் மத்தம்
          கன்றுவாய் சுவைப்ப, முன்றில் தூங்கும்
          படலைப் பந்தர்ப் புல்வேய் குரம்பை,
          நல்கூர் சீறுர் எல்லித் தங்கிக்,
          குடுமி நெற்றி நெடுமரச் சேவல் 5

          தலைக்குரல் விடியற் போகி, முனாஅது,
          கடுங்கண் மறவர் கல்லெழு குறும்பின்
          எழுந்த தண்ணுமை இடங்கட் பாணி,
          அருங்சுரம் செல்வோர் நெஞ்சம் துண்னெனக்,
          குன்றுசேர் கவலை, இசைக்கும் அத்தம், 10

          நனிநீடு உழந்தனை மன்னே! அதனால்
          உவஇனி-வாழிய, நெஞ்சே-மைஅற