பக்கம்:அகநானூறு 1, புலியூர்க் கேசிகன்.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூலமும் உரையும்

புலியூர்க் கேசிகன் ☆ 169


வைகுசுடர் விளங்கும் வான்தோய் வியனகர்ச்
கணங்குஅணி வனமுலை நலம்பா ராட்டித்,

தாம்இருங் கூந்தல்நம் காதலி
15

நீள்.அமை வனப்பின் தோறுமார் அணைந்தே!
நெஞ்சே! நீ வாழ்வாயாக.

இனிய தயிரைக் கடைந்த, திரண்ட தண்டினையுடைய தயிர் கடையும் மத்தானது, கன்று தன் வாயினாற் சுவைத்துக் கொண்டிருப்ப,இல்லத்துமுற்றத்திலே தொங்கிக்கொண்டிருக்கும். மர நிழலாகிய பந்தரையும், புல்லால் வேயப்பெற்ற குடில் களையும் உடைய வறுமைப்பட்ட, அத்தகைய சிற்றுார்களிலே, இரவு வேளைகளிலே தங்கினோம்.

நீண்ட மரத்திலேயுள்ள, செஞ்சூடு பொருந்திய நெற்றியை உடைய சேவலின் முதற்குரல் எழுந்த விடியற் காலையிலேயே, அவ்வூர்களைவிட்டுப் புறப்பட்டு, மேற்கொண்டும் நடந்து சென்றோம்.

வன்கண்மையினையுடைய மறவர்களது, கற்கள் பொருந்திய பழைமையான காட்டரண்களிலே நின்றும் எழுந்த, தண்ணுமைப் பறையின் அகன்ற கண்ணினின்றும் பிறந்த ஒலியானது, அரிய சுரங்களின் வழியே செல்பவர்களின் நெஞ்சகங்கள் நடுங்குமாறு ஒலிக்கும். குன்றுகளைச் சார்ந்த கவர்த்த நெறிகளையுடைய, அத்தகைய காட்டினும், நெடுக நீ மிகவும் துயருற்றனை. அதனால், * *

இருள் நீங்குமாறு, விடிவிளக்கு விளங்குகின்ற, வானளாவிய நம்முடைய பெரிய மாளிகையினிடத்தே, தாழ்ந்த கரிய கூந்தலையுடைய நம் காதலியின், சுணங்கு அணிந்த அழகிய முலையின் நல்லின்பத்தைப் பாராட்டி, நீண்ட மூங்கில் போன்ற அழகினையுடைய தோளினையும் அணைந்து, இனியாவது சென்று, நீயேனும் இன்புற்றிருப்பாயாக!

குறிப்பு: இரண்டு துறைகளுக்கும் ஏற்றவாறு கூட்டிப் பொருள் உரைத்துக் கொள்ளுக.

சொற்பொருள்: 3. படலைப் பந்தர்-தளைப்பரப்பாகிய பந்தர். 6. தலைக்குரல்-முதற்குரல். 13. வைகுசுடர்-விடிவிளக்கு விடி விளக்கு வைக்கும் வழக்கம் பண்டும் உண்டு.

88. நன்னராளன்!

பாடியவர்: ஈழத்துப் பூதன்தேவனார்; ஏறத்துப் பூதன் தேவன் என்பதும் பாடம் திணை: குறிஞ்சி. துறை: இரவுக் குறி வந்த தலைமகன் சிறைப்புறத்தானாகத் தோழி சொல்லியது.