பக்கம்:அகநானூறு 1, புலியூர்க் கேசிகன்.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூலமும் உரையும்

புலியூர்க் கேசிகன் ☆ 175


புதுவருவாயினையுடையதாகிய நியமம் என்னும் ஊரினையே கொடுத்தாலும், அஃது அமையும் எனக் கொள்பவர் அல்லரே, இவளுடைய பெற்றோர்!

சொற்பொருள்: 2. வரிமனை - பண்ணின சிற்றில். 4. சில் செவித்தாகிய புணர்ச்சி. 6. வருமுலை வருத்தா. வருந்தும் நின்வயின் என, வருத்தத்தை அவன்மீது ஏற்றியும் கொள்க. 9. அருந்திறற் கடவுள் செல்லுர் - அருந்திறற் கடவுள்கள் பலிபெறுதலையுடைய செல்லூர் என்க. 11. இரும்பிடம் படுத்த வடு-போரிலே முகத்திற்பெற்ற புண்களாகிய வடு.13. கொள்குநர் அல்லர் கொள்ளமாட்டார் ஆதலால், அவர் அன்பைப் பெறுக என்றாள். தாங்கள் அறத்தொடு நிற்றலால் அது கைகூடுவதாம் என்று சொல்லியதாகவும் கொள்க.

உள்ளுறை பொருள்: 'மூத்தோர் இளையோரை வருத்தார். அது செய்யாது, புணரி இளையோர் மனைகளைச் சிதைக்கும். அதுபோலப், பெரிய அறிவுடைய நீர் சிறியேமாகிய எங்களை இங்ங்ணம் வருத்துதலும் தக்கதன்று!' என்றனளாம்.

'களவினை முத்தோர் சிதைத்தனர்; எனவே, வரைந்து மணந்து கொள்க; யாமும் அறத்தொடு நிற்றலால், அது எளிதிற் கைகூடுவதேயாம்' என்றனள்.

91. நின் மாணலம் மறந்தே!

பாடியவர்: மாமூலனார். திணை: பாலை. துறை: பிரிவிடை மெலிந்த தலைமகளைத் தோழி வற்புறுத்தியது. சிறப்பு: குட்டுவன் புரந்த குடநாடு கோடையிலும் வளமிகுந்த நாடாயிருக்கும் என்பது.

('பொருள்மேற் காடும் கடந்து செல்லும் தலைவன். குடநாட்டையே பெறுவதாயினும், நின்னைப் பிரிந்து வாழ்வதை விரும்பான்; விரைவிலே நின்பால் வந்து சேர்வான்’ என்று, தலைவிக்குத் தேறுதல் கூறுகிறாள் தோழி)

விளங்குபகல் உதவிய பல்கதிர் ஞாயிறு
வளம்கெழு மாமலை பயம்கெடத் தெறுதலின்,
அருவி ஆன்ற பெருவரை மருங்கில்
சூர்ச்சுனை துழைஇ நீர்ப்பயம் காணாது,
பாசி தின்ற பைங்கண் யானை 5

ஓய்பசிப் பிடியொடு ஒருதிறன் ஒடுங்க,
வேய்கண் உடைந்த வெயில்அவிர் நனந்தலை
அரும்பொருள் வேட்கையின் அகன்றனர் ஆயினும்,