பக்கம்:அகநானூறு 1, புலியூர்க் கேசிகன்.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூலமும் உரையும்

புலியூர்க் கேசிகன் ☆ 177


சொற்பொருள்: 1. பகல் உதவிய ஞாயிறு மலையின் பயனும் கெடத் தெறுதலின் எனக் கூட்டுக. நினக்கு அளி செய்த தலைவன், நின்னைப் பிரிந்து வருத்தலும் செய்தனனாயினன் என்பது கருத்து. 3. ஆன்ற ஒழிந்த, 4. சூர்ச்சுனை தெய்வங்களையுடைய சுனையுமாம். 5. பாசி - சுனையடியிலே பாசிபடர்ந்திருக்கும் சேறு. 6. ஒய்பசி - முடுகி வருத்தும் பசி. 9. இரு கேழ் இரலை கரிய நிறமுடைய ஆண்மானும் ஆம். 11. மழவர் வீரர் மழவர் என்னும் இனத்தவரும் ஆம்.10. பதுக்கை - கற்குவியல் களத்திற் கண் பட்டாரைப் புதைத்து எழுப்பிய கற்குவியல்களுமாம். 12. ஒடுங்காடு - ஒர் ஊர்; உடைமரக் காடும் ஆம். 14. பணைபயில் இருக்கை - மருதவளஞ்சார்ந்த ஊர்: பெண்ணை செறிந்த கடற்கரையூரும் ஆம். 25. தாமரை முனையின் பலவின் கொழு நிழல் வசதியும்’ என்றலால், குறிஞ்சியை அடுத்த மருத நிலம் அஃதென்க. 17. குடநாடு - சேரர் நாடுகளுள் எட்டனுள் ஒன்று.

உள்ளுறை: உண்ணும் உணவற்ற காலத்தும், களிறு பிடியைப் பிரியாது ஒருங்கிருக்கும். நிலையற்ற பொருள் நாடி நாம் தலைவியைப் பிரிந்தனமே என, அவனும் அழுங்குவான் என்க. மழவர் களவுழ எழுந்த ஒடுங்காட்டுக்கு உம்பர், வளநாடான குடநாடு விளங்குவது போலப், பிரிவுக்குப் பின்னால் நாமும் இன்புறுவோம் என்றனளே போலக் குடநாடு பெறினும் என்றனள். அத்துணைப் பெருஞ் செல்வம் அடையப் பெற்றாலும் என்றதாம்.

92. வாரல், வாழியர், ஐயா!

பாடியவர்: மதுரைப் பாலாசிரியர் நற்றாமனார். திணை: குறிஞ்சி துறை: இரவுக்குறி சென்று தலைமகளைக் கண்ணுற்று நீங்கும் தலைமகனைப், பகற்குறி நேர்ந்த வாய் பாட்டால், தோழி வரைவு கடாயது.

(இரவுக் குறியிலே வந்து ஒழுகும் தலைமகன், அதனையே நெடிதும் விரும்பக் கண்ட தோழி பெரிதும் கலங்கினாள். அதனால், நாளைப் பகலிலே இன்ன இடத்திற்கு வந்தால் இவளைக் கூடப் பெறுகுவை எனப் பகற்குறி நேர்கிறாள். அஃது அருவிக்கரை ஆதலினாலும், பலரும் நீராட வருவாராதலாலும், காந்தளில் பூக்கொய்பவர் செறிவாராதலாலும், இடி முழக்கினாற் கார்காலம் தொடங்க, மகளிர் புனங்காவலுக்கு வர ஏதுவில்லாமையாலும், பகற்குறி மறுத்தலுமாகும்.)

நெடுமலை அடுக்கம் கண்கெட மின்னிப்,
படுமழை பொழிந்த பானாட் கங்குல்,
குஞ்சரம் நடுங்கத் தாக்கிக், கொடுவரிச்