பக்கம்:அகநானூறு 1, புலியூர்க் கேசிகன்.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மூலமும் உரையும்

புலியூர்க் கேசிகன் ☆ 187


போன, மூட்டுவாய் கிழிந்த கடுமையான நாற்றத்தையுடைய, 18 தசை கிடக்குமிடத்திலே,

பெருந் தலையினையுடைய எருவைகளோடு, பருந்துகள் பலவும் உடன்வந்து, இரவிலே காட்டரண்களிலேயுள்ளார் அலற, அவர்களைக் கொன்று, தாம் கைப்பற்றிக் கொண்ட ஆநிரைகளைத் தமக்குள் பகுத்துக் கொண்டு கற்பாறையின் முடுக்கரிலே தசையினைத் தின்று கொண்டிருக்கும். கொலை வில்லினையுடைய நிரைகவர்ந்த வீரர்களைப் போலச் சூழ்ந்திருக்கும், கடத்தற்கரிய அத்தகைய சுரநெறியைக் கடந்து சென்ற, கொடியோரின் பொருட்டாக, நாள்தோறும் பெரிய மூங்கில்களையுடைய சிறு காட்டிலே, ஆராய்ந்து . கொண்டு அறுத்த சிறிய கணுக்களையுடைய சிறு மூங்கிற் கோலைக் கொண்ட, வளைந்த கமுன்கையினையுடைய மகளிர்களோடு, பாடிவரும், பாணர்களைப் புரந்திடும் அன்பினையும், கழலும் தொடியினையும், கள்ளுண்டு மகிழும் இருக்கையினையுமுடைய நன்னன் வேண்மானது, வயலைக் கொடிகள் சூழவும் வேலிபோற் படர்ந்து கிடக்கும் வியலூரினைப் போன்ற, நினது பரந்த முலைகளையுடைய மார்பகம், பசலையால் உண்ணப்பட்டு வருந்தப்போலவும் நினைந்து நினைந்து ஆழ்ந்திடாதே” என்றனை: தோழி! இஃது என்னையோ ? குரவம் மலர்ந்து, முன்பனிக் காலமும் நீங்கிப்போயின். அரிய செவ்வியையுடைய இளவேனிற் காலம் இது. அறல் விளங்கும் நீண்ட மணலையுடைய, அகன்ற ஆற்றின் கரையிடத்தே, துறைக்கு அணிசெய்யும் மருதமரங்களுடன், தொகுதி படும்படியாக உயர்ந்து அழகு ஒழுகும் தளிர்களைக் கொண்டிருக்கும் பெரிய கிளைகளையுடைய மாமரத்திலே, கொத்துக்களாகப் புதுப் பூக்கள் செறிந்திருக்கும் சோலைகளிலே,.புகையினைப் போன்ற வெண்மேகங்கள் தவழ, அப்பூக்களை, நுகர்ந்து கொண்டிருக்கும் குயில்கள், தம் துணைகளை விரும்பியவாக அகவிக் கொண்டிருக்கும். அக் குரலினைக் கேட்போருக்குத் "தம் கண்களிலே வடியும் நீரை நிறுத்துதலும் எளிதாகுமோ? (கூறுவாயாக.)

சொற்பொருள்: 2. வறனுறல் அங்கோடு - உறுதியுற்ற அழகிய கோடும் ஆம். 4. குறும்பு - காட்டரண். 5. முடுக்கர் - சந்து. திற்றி - உணவு. கெண்டும் - உண்ணும். 8. அல்கலும் - நாடோறும். 9. இறும்பு - சிறுகாடு. 10. நுணங்கு கண் - சிறுகண். 11. அகவுநர் - பாணர். அற்சிரம் - முன் பனிக் காலம். 19. தொகல் கொள் - தொகுதி கொள்ள. பாணரும் விறலியரும் கையிலே மூங்கிற்