பக்கம்:அகநானூறு 1, புலியூர்க் கேசிகன்.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூலமும் உரையும்

புலியூர்க் கேசிகன் ☆ 193


ஒளிபொருந்திய விளக்கம், புறமுதுகிடாத மேற்கோளினை யுடைய வேந்தனின் பாசறைவிடத்தேயுள்ள, அடுதல் வல்ல யானையின் முகத்திலே பிணித்த ஒடையினது, ஒள்ளிய சுடர்போலத் தோன்றும், அத்தகைய இடமாகிய, ۰ی . பாடி வருவாரைத் தன்னிடத்தேயே வளைத்துக் கொள்ளும், கைவண்மை வாய்ந்த கோமானாகிய, குதிரைகள் பூண்ட நல்ல தேர்களையுடைய பெரியன் என்பானது, மலர் விரிந்த பூங்கொத்துக்கள் நிரம்பிய புன்னை மரங்களையுடைய, அழகிய சோலை சூழ்ந்த புறையாற்றின் கடற்றுரையின் கண்ணுள்ள புதிய நாரைக் கூட்டம் ஒலித்தாற் போல, ஊரலரும் எழுந்ததே.

தண்ணென்று பொழுது புலர்ந்திடும், இருள் தங்கிய விடியற்காலத்திலே வெளிச்சென்ற எருமையானது, நெய்தலின் புது மலர்களைத் தின்னும், தாழை வேலிகளையுடைய அழகிய தோட்டங்களையுடைய, எமது ஆரவாரமிக்க ஊரின்கண்ணே, அலரும் அங்ங்ணம் எழுந்தனவே!

சொற்பொருள்: 1. ஆரம் - சந்தனம். 2. புரைய - உயர்வாக 4.ஆர்- அசை, 6. கொண்டல்-மேகம் 8-10.படகு முனை விளக்கம் - யானைமுகத்துப் பொன் ஒடை போலத் தோன்றும் என்க. 13. புறந்தை பொறையாறு என இந்நாளிலே வழங்கும். 14. வம்பநாரை - புதிய நாரை, 15. அம்பல் - அலர். 18. கைதழை - தாழை. •

விளக்கம்: மீன் கொள்வார் கொள்ளக், கடலும் ஒலி யவிந்திரக்க, வம்ப நாரை அலரும், அதுபோல, நீ இவளைக் களவலேகூட, இவள் பெற்றோரும் அறியாது வாளாயிருக்க, வம்ப மாக்கள் அலர் உரைக்கின்றனரே என்க.

101. முனிதகு பண்பு!

பாடியவர்: மாமூலனார். திணை: பாலை, துறை: பிரிவிடை வேறுபட்ட கிழத்தி தோழிக்குச் சொல்லியது. தோழி கிழத் திக்குச் சொல்லியது உமாம். -

(தன் காதலன் தன்னைப் பிரிந்து சென்றுவிட மனங்கலங்கி வாடும் தலைவியின் நினைவுகள் பலபடியாகச் சுழல்கின்றன. அவற்றுள் ஒன்று இது என்றும் அவனுக்கு இன்பந் தந்தனமே யன்றி, "அவள் வெறுக்கத்தக்கன யாதும் செய்தறியோமே? அவன் நம்மைக் கைவிட்டுப் போயினதுதான் ஏனோ? என்று சொல்லித் தோழியுடன் வருந்துகிறாள்.)

அம்ம வாழி, தோழி! இம்மை
நன்றுசெய் மருங்கில் தீதுஇல் என்னும்