பக்கம்:அகநானூறு 1, புலியூர்க் கேசிகன்.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

194

அகநானூறு -களிற்றியானைநிரை



          தொன்றுபடு பழமொழி இன்றுபொய்த் தன்றுகொல்?
          தகர்மருப்பு ஏய்ப்பச் சுற்றுபு சுரிந்த
          சுவல்மாய் பித்தைச் செங்கண் மழவர் 5

          வாய்ப்பகை கடியும் மண்ணொடு கடுந்திறல்
          தீப்ப்டு சிறுகோல் வில்லொடு பற்றி,
          நுரைதெரி மத்தம்கொளீஇ, நிர்ைப் புறத்து
          அடிபுதை தொடுதோல் பறைய ஏகிக்,
          கடிபுலம் கவர்ந்த கன்றுடைக் கொள்ளையர், 10
 
          இனம்தலை பெயர்க்கும் நனந்தலைப் பெருங்காட்டு,
          அகல்இரு விசும்பிற்கு ஒட்ம் போலப்,
          பகலிடை நின்ற பல்கதிர் ஞாயிற்று
          உருப்புஅவிர்பு ஊரிய சுழன்றுவரு கோட்பை,
          புன்கான் முருங்கை ஊழ்கழி,பன்மலர் 15
 
          தண்கார் ஆலியின், தாவன உதிரும்
          பனிபடு பன்மலை இறந்தோர்க்கு,
          முனிதகு பண்புயாம் செய்தன்றோ இலமே!

அம்ம!. தோழி! வாழ்க!

'இம்மையிலே நல்லனவே செய்யுமிடத்து அவர்க்கு என்றுமே தீது வருவதில்லை’ என்று சொல்லப்படும் தொன்றுதொட்டு வழங்கிவரும் பழமொழியும், இந்நாளிலே பொய்யாகிப் போயினது போலும்!

செம்மறியாட்டுக் கிடாயின் கொம்பினைப் போலச் சுருண்டு கடை சுரிந்த பிடரியை மறைக்கும் தலைமயிரினையும், சிவந்த கண்களையும் உடையவர் மழவர்கள். அவர்கள், தம் வாயினின்று எழும் பகையினை, எழாமல் தடுக்கும் பொருட்டாகப் புற்று மண்ணைத் தம் வாயிலே அடக்கிக் கொள்வர். கடுமையான சக்திவாய்ந்த, நெருப்புண்டாக்கும் சிறிய அம்பினை, வில்லிலே தொடுத்துக் கைப்பற்றியவராகச் செல்வர். சென்று, வெண்ணெயை வெளிப்படுத்தும் தயிர்கடையும் மத்தினைக் கவர்ந்து கொள்வர். ஆநிரைகள் உள்ளவிடத்திலே, தம் காலடித் தடங்களை மறைக்கும் செருப்புக்கள் ஒலிக்குமாறு சென்று, காவல் மிகுந்த தொழுவங்களிலேயுள்ள கன்றுகளுடன் கூடிய பசுக் கூட்டங்களைக் கொள்ளையிடுவர். அப்படிக் கொள்ளையிட்ட ஆணினங்களை, அவர், தம்மிடத்திற்கு ஒட்டிக் கொண்டு போகும், அகன்று கிடக்கும் இடத்தையுடையது பெரிய காடு. அதன் கண்,

அகன்ற பெருவானாகிய கடலினைக் கடத்தற்குரிய ஒடத்தைப்போலப், பகல் வேளையிலே, வானிடையே