பக்கம்:அகநானூறு 1, புலியூர்க் கேசிகன்.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூலமும் உரையும்

புலியூர்க் கேசிகன் ☆ 197


இன்றோ, அவன், தான் சொன்னதுபோல வந்து நமக்கு அருளாமையினால், மகிழ்ச்சியைத் தரும் பண்பினையுடைய, கருங்கூந்தல் சூழ்ந்த ஒள்ளிய நுதலிலே, பசப்பும் ஒருங்கே வந்துசேர, அதனால் அலரும் ஆயிற்று. நாம் அவனோடு கூடிக் கண்டதுதான் என்னையோ? -

சொற்பொருள்: 1. உளைமான் - சிங்கம். துப்பு - வலிமை. 2.கழுது - பரண். பிழி - கள். 3. உரைத்த சந்து - சந்தனச் சாந்து. 5. உளரினள் - கோதினள்.கொடிச்சி - கானவர் மகள்; கானவனின் மனைவி. 6. குறிஞ்சி - குறிஞ்சிப் பண். 8. பாடுபெறுதல் - உறங்கப் பெறுதல், 9. மறம் புகல் மழகளிறு வீரம் புகலிடமாக அமைந்த இளங்களிறு. 12. அறிதல் ஒம்பி - அறியாமல் தன்னைக் காத்த, 13. வீழாக் கதவம் - தாழ் வீழ்த்தாத கதவம். 19. இருஞ்சூழ் ஓதி - இரும் ஒதி சூழ் எனக்கூட்டுக.

உள்ளுறை: காவலை மறந்து, கள்ளுண்டு மயங்கினான் கானவன். அவன் பிரிவாற்றாது, அவனை நினைந்து பாடினாள் அவன் மனைவி. அவன், அதனைக் கேளாது கிடக்கவும், தினை கவர வந்த களிறு, அதனைக் கேட்டுத் தன் செயல் மறந்து உறங்கிக் கிடந்தது.

காவலைக் கடந்து நம்மை இன்புற்றுக் களித்தான் நம் தலைவன். அவனை நினைந்து நாம் புலம்புகின்றோம். அவனோ அதனை நினையானாயினான். ஆயின், அலர் உரைக்கும் பெண்டிரோ, தம் பிற வினைகளையும் மறந்து, அதனை எடுத்துப்பேசத் தொடங்கிவிட்டனர். இதனால், தலைவன் விரைந்துவேட்டு வருபவனாவான் என்பது குறிப்பு.

103. தம்மொடு சென்ற நலன்!

பாடியவர்: காவிரிப்பூம்பட்டினத்துச் செங்கண்ணனார். திணை: பாலை. துறை: தலைமகன் பிரிவின்கண் தலைமகள் தோழிக்குச் சொன்னது.

(அவர்தான் அருளின்றி நம்மைப் பிரிந்து போயினார். பசலையை எனக்குத் துணையாக வைத்துவிட்டு, என் அழகை யெல்லாம் தம்முடன் கொண்டுபோய் விட்டாரே; அதனையாவது எனக்கு அவர் மீண்டும் தாராரோ? என்று, புலம்புகிறாள் தலைவி)

நிழல்அறு நனந்தலை, எழில்ஏறு குறித்த
கதிர்த்த சென்னி நுணங்கு செந்நாவின்,
விதிர்த்த போலும் அம்நுண் பல்பொறிக்,
காமர் சேவல் ஏமம் சேப்ப;
முளிஅளில் புலம்பப் போகி, முனாஅது 5