பக்கம்:அகநானூறு 1, புலியூர்க் கேசிகன்.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

198

அகநானூறு -களிற்றியானை நிரை



          முரம்பு அடைத் திருந்தமூரி மன்றத்து.
          அதர்பார்த்து அல்கும் ஆகெழு சிறுகுடி
          உறையுநர் போகிய ஓங்குநிலை வியன்மலை;
          இறைநிழல் ஒருசிறைப் புலம்புஅயா உயிர்க்கும்
          வெம்முனை அருஞ்சுரம் நீந்தித், தம்வயின், 10

          ஈண்டுவினை மருங்கின் மீண்டோர் மன்னன,
          நள்ளென் யாமத்து உயவுத்துணை ஆக
          நம்மொடு பசலை நோன்று, தம்மொடு
          தானே சென்ற நலனும்
          நல்கார் கொல்லோ, நாம் நயந்திசி னோரே?

தோழி! நம்மால் விரும்பப்பட்டவரான நம்முடைய தலைவரானவர்,

நிழலே அற்றுப்போயின பாலையின் பரந்த இடத்திலே, புல்லூற்றினால் கெளவிக் கொள்ளுதலைக் குறிக்கப்பட்ட பெரிய தலையினையும், நுணுகிய சிவந்த நாவினையும், தெளித்து விட்டது போலும் நுண்மையான அழகிய பல புள்ளிகளையும் உடைய, அழகான குறும்பூழ்ச் சேவலானது. பாதுகாவலான வேறு இடத்திற்குச் செல்லுவதற்கு எண்ணித் தானிருந்து காய்ந்துபட்ட சிறுபுதல் தனித்தொழிய, வெளியேறிப் போகும். அப்படிப் போயின. அது,

வன்னிலத்தை அடுத்திருந்த பழைமையான பெரி மன்றிலே, ஆறலைக்க வழியையே பார்த்தவாறு கள்வர் பதுங்கியிருக்கும், பசுக்கள் பொருந்திய சிற்றுாரினிடத்தே, அதன்கண் தங்கியிருப்போர் விட்டுப்போன உயர்ந்த நிலை யினையுடைய பெரிய மனையிலே, இறைப்பு நிழலின் ஒரு பக்கத்தே தங்கியிருந்து, தனிமையால் பெருமூச்செறிந்திருக்கும், கொடிய முனை இருப்புக்களையுடைய அத்தகைய அரிய சுரத்தினைக் கடந்து, தம்மிடத்தே வந்துற்ற பொருள் ஈட்டும் வினையினிடத்தே, அவர் மீண்டும் செல்லுதலுற்றார்.

அவர், நள்ளென்ற யாமத்தும், நமது வருத்தத்திற்குத் துணையாகும் பொருட்டு, நம்மிடத்தே பசலையை இருக்க விட்டுவிட்டுத், தம்மோடு தானே உடன் சென்றுவிட்ட, நம்முடைய பழைய நலனையேனும், நமக்குத் திரும்பத் தந்தருளாரோ?

சொற்பொருள்: 1. எழால் புல்லூறு, ஏறு குறித்தல் வெளவுதல் குறித்தல் 2 கதிர்த்த ஒளிவிடும் தலையுமாம். முரம்பு - வன்னிலம்.