பக்கம்:அகநானூறு 1, புலியூர்க் கேசிகன்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

8

அகநானூறு - களிற்றியானை நிரை



வானைத் தழுவும் முடிகளையுடைய சிறந்த அம்மலையின் சாரலில் ஒருபுறத்தே, அசைந்த நடையினையுடைய மரையாவை வலப்பக்கத்திலே வீழுமாறு அடித்து வீழ்த்தி, அதன் ஒள்ளிய செங்குருதியை உறிஞ்சிக் குடித்து அருந்திவிட்டுப், புலால் நாற்றமுடைய ஒரு புலியானது, அதனைக் கைவிட்டுச் சென்றது. மூட்டுவாய் கிழிந்து, மிகுந்த முடைநாற்றம் வீசிக்கொண்டிருந்த அந்த மரையாவின் தசையைக் கொள்ளைக் கூட்டத்தினரைப் போலக் கவர்ந்து சென்று கொண்டிருந்தது அந்தப் பருந்துச் சேவல். அத்தகைய காடு, இலைகளற்ற மரங்களையுடையதாக அகன்று, நெடுந்தொலைவு பரந்தும் கிடக்கும்.

‘என் தலைவிக்கு நல்ல கலன்களை ஈட்டிக் கொணர்ந்து தரல் வேண்டும்’ என்ற உள்ளத்துடன், அதனைக் கடந்து செல்லவும், என்னைப் பின்நின்று தூண்டிவிடுகின்ற என்னுடைய நெஞ்சமே!

முருக்கம்பூவின் இதழ்கள்போலக் காண்பதற்கு இனிய சிவந்த வாயிதழ்களையும், அழகிய இனிக்கின்ற பேச்சினையும், தெரிந்தெடுத்த ஆபரணங்கள் அணிந்த சிறப்பினையும் உடைய, என் மடந்தையின் வளைந்த காதணிகளுடன் பொருந்துகின்ற அமர்த்த கண்களின் பார்வையானது, நெடுந் தொலைவிலேயுள்ள பாலைவழி இடத்தும், என் உள்ளத்தே என்பால் தோன்றி, என்னை மேற்செல்லவிடாது தடுக்கும் அல்லவோ?

வாய்மைபோல நீ உணர்த்தும் பொய்ம்மொழிகள் அத்தகைய என் துன்பத்தினை எங்ஙனம் போக்குமோ? அதனைச் சொல்வாயாக!

சொற்பொருள்: 1. மேஎந்தோல் மேவின தோல், 3. கடி - காவல்,இளைப்பட்ட-காவற்பட்ட வலைப்பட்ட4 அல்கு இரை - மிக்க இரை. 5. மான்று - மயங்கி விறல் - பெருமையால் பிற மலைகளை வென்ற சிறப்பு. 7. வலம்பட - வலத்தே வீழ; வெற்றி பட உவறி உண்டு - உறிஞ்சிக் குடித்து ஊற்றி உண்டு. 9. கவவு - மூட்டுவாய். 13. துரக்கும் - முடுக்கும். -

4. கவின் பெறு கானம்!

பாடியவர்: குறுங்குடி மருதனார். திணை: முல்லை. துறை: தோழி தலைமகளைப் பருவங்காட்டி வற்புறுத்தியது.

(தன்னைப் பிரிந்து தொழில்மேற் சென்ற தலைவனை நினைந்து நினைந்து உருகிக் கொண்டிருக்கிறாள் ஒரு தலைவி. 'அவன் குறித்துச் சென்ற கார்காலம் இதோ தொடங்கிவிட்டது; அவனும் விரைய வந்துவிடுவான்' என்று, பருவ காலத்தைக்-