பக்கம்:அகநானூறு 1, புலியூர்க் கேசிகன்.pdf/223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூலமும் உரையும்

புலியூர்க் கேசிகன் ☆ 209


7. வெண்ணுனை - தீட்டி வெண்மையாகத் தோன்றும் முனை. வெந்நூனை பாடமாயின் வெம்மையுடைய நுனை என்க. 8. உவல் - கற்குவியல். 10. மடிந்த இல்லாதுபோன. 13. வரியலர் - புலித்தோல். ... " -

விளக்கம்: இத்துணைய பல கொடுவழிகளும் கடந்து வந்தனமாதலின், இனி இடைவழியிலே திரும்புதல் ஆகாது; வினைமேற்செல்வோம் எனத் தன் நெஞ்சிற்குக் கூறினான்.

110. கடுஞ்சூள் தருகுவல்!

பாடியவர்: போந்தைப் பசலையார் திணை: நெய்தல். துறை: தோழி செவிலித்தாய்க்கு அறத்தொடு நின்றது.

(தலைவியின் களவு உறவுபற்றி ஊரிலே அலர் எழத் தோழிய்ைச் செவிலி வினவுகிறாள். அவள், ஒருநாள் கடற் கரையிலே நடந்த நிகழ்ச்சியைக் கூறி, அவனைத் தலைவி காதலிக்கின்றாள் எனக், குறிப்பாக உணர்த்துகிறாள்.)

அன்னை அறியினும் அறிக, அலர்வாய்
அம்மென் சேரி கேட்பினும் கேட்க,
பிறிதுஒன்று இன்மை அறியக் கூறிக்,
கொடுஞ்சுழிப் புகாஅர்த் தெய்வம் நோக்கிக்,
கடுஞ்சூள் தருகுவன், நினக்கே, கானல் 5

தொடலை ஆயமொடு கடல்உடன் ஆடியும்,
சிற்றில் இழைத்தும், சிறிசோறு குவைஇயும்,
வருந்திய வருத்தம் தீர யாம்சிறிது
இருந்தன மாக எய்த வந்து '
தடமென் பணைத்தோள் மடநல் லிரே! 10

எல்லும் எல்லின்று; அசைவுமிக உடையேன்,
மெல்இலைப் பரப்பின் விருந்துஉண்டு, யானும்இக்
கல்லென் சிறுகுடித் தங்கின்மற்று எவனோ?
எனமொழிந் தன்னே ஒருவன்; அவற்கண்டு,
இறைஞ்சிய முகத்தேம் புறம்சேர்பு பொருந்தி, 15

'இவைநுமக்கு உரிய அல்ல; இழிந்த
கொழுமீன் வல்சி' -ன்றனம்; இழுமென '
நெடுங்கொடி நுடங்கும் நாவாய் தோன்றுவ
கானாமோ? எனக் காலின் சிதையா,
நில்லாது பெயர்ந்த பல்லோ ருள்ளும் 20

என்னே குறித்த நோக்கமொடு நன்னுதால்!
ஒழிகோ யான்?"என அழிதகக் கூறி,
யான்'பெயர்க' என்ன நோக்கித், தான்தன்