பக்கம்:அகநானூறு 1, புலியூர்க் கேசிகன்.pdf/227

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூலமும் உரையும்

புலியூர்க் கேசிகன் ☆ 213


கழியக் காதலர் ஆயினும், சான்றோர்
பழியொடு வரூஉம் இன்பம் வெஃகார்;
வரையின் எவனோ? - வான்தோய் வெற்ப!
கணக்கலை இகுக்கும் கறிஇவர் சிலம்பின்
மணப்பு:அருங் காமம் புணர்ந்தமை அறியார், 15

தொன்றுஇயல் மரபின் மன்றல் அயரப்
பெண்கோள் ஒழுக்கம் கண்கொள நோக்கி,
நொதுமல் விருந்தினம் போல,இவள்
புதுநாண் ஒடுக்கமும் காண்குவம், யாமே!

வானளாவும் வெற்பினை உடைய தலைவனே! கூனல் முதுகினையும். குறுக அடியிட்டுச் செல்லும் நடையினையும் உடைய கரடிகளின் கூட்டமானது கரையான் கட்டிய சிவந்த நிலையினையுடைய புற்றினது, மண்ணாற் புனைந்த நீண்ட உச்சிகள் உடையுமாறு பெயர்த்திட்டுப், புற்றாஞ்சோறாகிய இரை யினை விரும்பித் திரிந்து கொண்டிருக்கும், நடுநாள் இரவிலே,

குட்டியை ஈன்ற அணிமையையுடைய பெண் புலியானது பசித்ததென்று, ஆண்மையுடைய ஆண்புலியானது, ஒளி வீசுகின்ற ஏந்திய கோட்டினையுடைய ஆண்யானையைக் கொன்று முழங்கும்; அத்தகைய குளிர்ந்த இருள் படர்ந்த சோலையிலே, யாமே தமியம்’ என்றும் நினையாயாய், ஈங்குக் கடந்து வந்தனையாதலின், தீங்கே எமக்குச் செய்தனையாவாய்!

நீ வாராது ஒருநாள் இடைப்படினும், என் தோழியோ உயிர் வாழமாட்டாள். அதேபோல, அவளுடைய தோளிடத்துத் தழுவுதலை நீயும் விரும்புதலுடையை சான்றோராவார் மிக்க காதல் கொண்டனரேயானாலும், பழியுடன் கூடியதாக வருகின்ற இன்பத்தினை ஒருபோதும் விரும்பவே மாட்டார்கள். ஆகவே, நீயும் முறையாக வரைந்து கொள்வதனால் வரும்குறைவுதான் என்னையோ?

கலைமான் கூட்டம்தாழ ஒலிக்கும், மிளகுக் கொடி படர்ந்த மலைச்சாரலிலே, எய்துதற்கு அரிய காமத்தால் நீவிர் களவிலேகூடியமையை அறியாத எமர், தொன்றுதொட்டு வரும்முறைமைப்படி, துமக்கு வதுவை நிகழ்த்திட

நீ இவளை வரைந்து பெண்கொள்ளும், அவ்வொழுக்கத் தினைக் கண்ணார நோக்கி, யாம், அயலேமாகிய புதியேம் போல, இவளுடைய புதிய நாணத்தாலாகிய ஒழுக்கத்தினையும், அதுகாலைக் காண்பேமன்றோ! .

சொற்பொருள்: 1. கூனல் எண்கின், கூரல் எண்கின், கூருகிர் எண்கின் எனவும் பாடங்கள். தொழுதி கூட்டம், சிதலை -கரையான். 3. வாங்கி - பெயர்த்து. வயவுப்பிண - உணவு