பக்கம்:அகநானூறு 1, புலியூர்க் கேசிகன்.pdf/231

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூலமும் உரையும்

புலியூர்க் கேசிகன் ☆ 217




அரிமதர் மழைக்கண், அமைபுரை பணைத்தோள்,
அணங்குசால், அரிவையைக் காண்குவம் - 15
பெலம்படைக் கலிமாப் பூண்ட தேரே!

குதிரைகளைச் செலுத்தும், இலக்கண மரபினை நன்கு அறிந்தவனாகிய பாகனே! . -

(ஏடி தோழி! கேட்பாயாக. வேலன் வெறியாடும் களத்திலே பரந்த பலவாக விரவிக்கிடக்கும் சிறுபூக்களைப் போலப் பூக்கள் உதிர்ந்து கிடக்கும் குளிர்ச்சி பொருந்திய கரிய முல்லை நிலத்திலே, வெம்மையான கதிர்களும் மழுங்கிய மலையினைச் சென்று சேரும் ஞாயிறானது, பாம்பு விழுங்கும் திங்களைப் போல, மெல்ல மெல்ல மறைகின்ற சிறுமையினையுடைய, புல்லிய மாலைக் காலத்திலேயும், நம்மை அவர் நினையார்’ என்று தோழியிடம் கூறியவளாக, நம்மை வெறுத்து உறையும், நம் தலைவியின் துன்பம் நீங்குமாறு,

நெடுங் கொடிகள் அசைந்தாடும் வானளாவிய மதிலின் கண், இராப்பொழுதைக் காத்திருப்போர் நாட்டிய விளக்குகளின் நெருக்கம், வானத்திடத்தே விளங்கும் விண்மீன்களைப் போல விளங்கித் தோன்றும், அரிய காவல் திறனையுடைய, பகைவர்க்கு அச்சத்தைத் தரும் மூதூரிலேயுள்ள செல்வ மிகுந்த மாளிகையிலே அடங்கியுள்ள, குற்றமற்ற கற்பினையும், செவ்வரி படர்ந்த மதர்த்த குளிர்ந்த கண்களையும், மூங்கிலையொத்த பணைத்த தோள்களையும் உடைய, தெய்வமகள் போன்ற சிறந்த நம் தலைவியைச் சென்று நாம் காண்போம்)

பொன்னாலாகிய சேணத்தினைப் பூண்ட செருக்குடைய குதிரைகள் பூட்டப்பெற்ற, நின் தேரினை, அவ்விடத்தே விரையச் செலுத்துவாயாக!

சொற்பொருள்: 1. எல்ல - ஏ.டீ. 2. தாஅய சொரிந்து பரந்த 3. விரவுவீ - கலந்து கிடக்கும் பூக்கள். உறைத்த - உதிர்ந்த, 5. நுங்குதல் - விழுங்குதல். 13. அடங்கிய தன் எழுச்சி குன்றியவளாகச் சோர்ந்து இருந்த 16. கலிமா - விரையச் செல்லும் குதிரைகள்.

115. காதலர் நோயிலர் ஆக!

பாடியவர்: மாமூலனார். திணை: பாலை துறை: பிரிவிடை வற்புறுக்குந் தோழிக்குத் தலைமகள் சொல்லியது. சிறப்பு: குடநாட்டுச் செழிப்பும், எவ்வியும். -

(தன்னைப் பிரிந்துசென்ற காதலன், வருவதற்குக் குறிப்பிட்ட காலத்தினும் வாராமையால், பெருந்துயரம் உற்றனள் தலைவி. அவன் விரைந்து வருவான் எனத் தோழி அவளை ஆற்றுவிக்க-