பக்கம்:அகநானூறு 1, புலியூர்க் கேசிகன்.pdf/234

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

220

அகநானூறு - களிற்றியானை நிரை



          எரியகைந் தன்ன தாமரை இடைஇடை
          அரிந்துகால் குவித்த செந்நெல் வினைஞர்
          கட்கொண்டு மறுகும் சாகாடு அளற்றுஉறின்,
          ஆய்கடும்பு அடுக்கும் பாய்புனல் ஊர!
          பெரிய நாண்இலை மன்ற; பொரிஎனப் 5

          புன்குஅவிழ் அகன்துறைப் பொலிய, ஒள்நுதல்,
          நறுமலர்க் காண்வரும் குறும்பல் கூந்தல்,
          மாழை நோக்கின், காழ்இயன் வனமுலை,
          எஃகுடை எழில்நலத்து. ஒருத்தியொடு நெருநை
          வைகுபுனல் அயர்ந்தனை என்ப; அதுவே, 10

          பொய்புறம் பொதிந்துயாம் கரப்பவும் கையிகந்து
          அலர்ஆ கின்றால் தானே, மலர்தார்,
          மையணி யானை, மறப்போர்ச் செழியன்
          பொய்யா விழவின் கூடற் பறந்தலை,
          உடன்இயைந்து எழுந்த இருபெரு வேந்தர் 15

          கடன்மருள் பெரும்படை கலங்கத் தாக்கி,
          இரங்குஇசை முரசம் ஒழியப், பரந்துஅவர்
          ஓடுபுறம் கண்ட ஞான்றை,
          ஆடுகொள் வியன்களத்து ஆர்ப்பினும் பெரிதே!

நெருப்புக் கப்புவிட்டு எரிவது போன்ற தாமரைப் பூக்களின் இடையினிடையே, செந்நெல் தாளினை அரிந்து குவிப்பவர் நெல்லரிவோர். தங்கட்குக் கள்ளைக் கொண்டு பலகாலும் வருகின்ற வண்டியானது சேற்றிலே பதிந்திட்டால், சிறந்த கரும்புகளை வெட்டிச் சேற்றிலே அடுக்கி, அதனைப் போக்குபவர் அவர். அத்தகைய, பாயும் புனல்வளம் மிக்க ஊரனே உறுதியாக, நீ பெரிதும் நாணமில்லாதவனே யாவாய்.

பொரிபோலப் புன்கம்பூவானது மலர்ந்திருக்கும், அகன்ற நீர்த்துறைகள் பொலிவுறுமாறு, ஒளிபொருந்திய நெற்றியினையும், நறிய மலர்கள் காண்பதற்கு அழகியதாகச் சூட்டிய குறிய பலவாகிய கூந்தலினையும், மாவடுப்போன்ற கண்ணினையும், முத்து வடங்கள் அசையும் அழகிய முலைகளையும், நுண்ணிய அழகின் பிற நலங்களையுமுடைய பரத்தை ஒருத்தியுடன், நேற்று, இடையறாது ஒழுகிவரும் புனலிலே, நீ புனல் விளையாட்டயர்ந்தனை எனப் பலரும் கூறுவர்.

மலர்ந்த பூமாலையினையும், தலையிலே மை அணிந்த யானையினையும் உடைய, மறம் பொருந்திய போரிலே வல்லவன் பாண்டியன். அவன், என்றும் நீங்காத விழவினையுடைய கூடல் போர்க்களத்திலே, தம்முடன் ஒருங்கு இயைந்து எழுந்த சோழ, சேர அரசர்களது கடல் அனைய பெரும் படைகளைக் கலங்கியழியுமாறு தாக்கினான். ஒலிக்கும்