பக்கம்:அகநானூறு 1, புலியூர்க் கேசிகன்.pdf/235

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூலமும் உரையும்

புலியூர்க் கேசிகன் ☆ 221


ஒலியினையுடைய முரசங்களைக் களத்திலேயே ஒழியவிட்டு, அவர் பரந்து சிதறியோடும் புறக்கொடையையும் கண்டான். அந்த நாளிலே, வெற்றி கொண்டாடிய பெரிய களத்தின்கண் எழுந்த ஆரவாரத்தினும் பெரிதாக, நின் செயல் குறித்து ஊரிலேயும் அலர் ஆரவாரம் பெரிதாகின்றதே!

அதுதான், அதனைப் பொய்யென்று புறத்தே மூடி மறைக்க யாம் முயன்றாலும், எம் கைகடந்தும் எழுகின்றதே!

சொற்பொருள்: 3. மறுகுதல் பலகாலும் வந்து போதல். சாகாடு - வண்டி, 6.புன்கு புன்க மரம். 8 மாழை- மாவடுஇளமை - அழகு, 9. எஃகுடை எழில் நலம் - எஃகு நெஞ்சத்தையும் உடைக்கும் எழில் நலம் எனவும் கூறலாம். 10. வைகு புனல் - இடையறாது ஒழுகிவரும் புனல்,

உள்ளுறை: நெல்லரிவோர் தம் தொழிலை விடுத்துக் கள்வண்டியின் ஆழ்ச்சியைப் போக்குதற்குச், சிறந்த கரும்பினைச் சிதைப்பர். அவர்போல, நீயும் இல்லறமாகிய நின் கடமையை மறந்து, இழிந்த பரத்தையின் இன்பத்தையே விரும்பிச், சிறந்த தலைவியைச் சிதைவுறச் செய்தனை' என்றனள்.

117. சிலம்பு நகச் சென்றனள்!

பாடியவர்:....... திணை: பாலை துறை: மகட் போக்கிய செவிலித்தாய் சொல்லியது. சிறப்பு: பண்ணன்.

(வீட்டின் இற்செறிப்பையும் கடந்து, தன் காதலனுடன் உடன் போக்கிலே சென்றுவிட்டாள் ஒரு தலைவி. அவளை நினைந்து புலம்பு கிறாள் செவிலித்தாய். அவள் மகளின் கூந்தலை ஒப்பனை செய்யும் காட்சியை நினைத்துக் கூறுவது, மிகவும் நயமுடைய பகுதியாகும்)

மெளவலொடு மலர்ந்த மாக்குரல் நொச்சியும்,
அவ்வரி அல்குல் ஆயமும் உள்ளாள்,
ஏதிலன் பொய்ம்மொழி நம்பி, ஏர்வினை
வளம்கெழு திருநகர் புலம்பப் போகி,
வெருவரு கவலை ஆங்கண், அருள்வரக், 5

கருங்கால் ஒமை ஏறி, வெண்தலைப்
பருந்து பெடைபயிரும் பாழ்நாட்டு ஆங்கண்,
பொலந்தொடி தெளிர்ப்ப வீசிச் சேவடிச்
சிலம்புநக இயலிச் சென்றஎன் மகட்கே -
சாந்துஉளர் வணர்குரல் வாரி, வகைவகுத்து 10 ,

யான்போது துணைப்பத், தகரம் மண்ணாள்,
தன்ஓ ரன்ன தகைவெங் காதலன்
வெறிகமழ் பன்மலர் புனையப் பின்னுவிடச்
சிறுபுறம் புதைய நெறிபுதாழ்ந் தனகொல் -
நெடுங்கால் மாஅத்து ஊழுறு வெண்பழம் 15