பக்கம்:அகநானூறு 1, புலியூர்க் கேசிகன்.pdf/238

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

224

அகநானூறு - களிற்றியானை நிரை



பலநாளும் புணர்தற்குக் குறியாகக் கொண்ட, முற்றிய கதிரையுடைய திணைப்புனத்திலே, கிளிகடிகின்ற பாடலினையும் அவள் கைவிட்டனள். இனி என்ன ஆகுவளோ? இரங்கத் தக்கவள்! நின் அருள் இல்லாமற்போனால், அவளும் இல்லையாகி இறந்தே போவாளே! (அவளுக்கு அருளாயோ?)

3. இகல் முருகு பாடமாயின், பகைவரோடு மாறுபாடு கொண்ட முருகன் என்க.

சொற்பொருள்: 1. கறங்குதல் - ஒலித்தல். பிறங்கு மலை - விளங்கும் மலை. கவாஅன் - பக்கம்.3 முருகு - முருகன். 5 வயநாய் - வலிய வேட்டை நாய். 6. கவ்வை ஊரலர், 7.இரும்பிடி-பெரிய பிடியும் ஆம் 8. கோள் - கொள்ளுதல், 9. வழங்கும் - திரியும்.

விளக்கம்: பகலிற் கவ்வை அஞ்சுதும் என்றதனால், பகற்குறி விலக்கினாள். இரவில் வருதல் அஞ்சுதும் என்றதனால், இரவுக்குறி விலக்கினாள். கிளிகடி பாடல் ஒழிந்தனள் என்றதனால், செறிப்பறிவுறுத்தினாள். நின் அளியலது இவள் என்றதனால், வரைவு கடாயினாள் என்றறிக.

119. துணைப்பத் துணிகுவர் கொல்லோ!

பாடியவர்: குடவாயிற் கீரத்தனார். திணை: பாலை துறை: செலவுணர்த்திய தோழிக்குத் தலைமகள் சொல்லியது; தோழி தலைமகட்குச் சொல்லியதுமாம்.

(வேந்துவினை முடிக்கப் பிரியப்போகின்றவன், செய்தியைத் தோழி மூலம் தலைவிக்கு அறிவிக்கத் தலைவி, தன்னையும் உடன் அழைத்துப் போகுமாறு இங்ங்ணம் கூறுகின்றாள்.)

          'நுதலும், தோளும், திதலை அல்குலும்,
          வண்ணமும், வனப்பும், வரியும் வாட
          வருந்துவள், இவள்'எனத் திருந்துபு நோக்கி,
          'வரைவுநன்று' என்னாது அகலினும், அவர்-வறிது,
          ஆறுசெல் மாக்கள் அறுத்த பிரண்டை, 5

          ஏறுபெறு பாம்பின் பைந்துணி கடுப்ப,
          நெறியயல் திரங்கும் அத்தம்; வெறிகொள,
          உமண்சாத்து இறந்த ஒழிகல் அடுப்பில்,
          நோன்சிலை மழவர் ஊன்புழுக்கு அயரும்
          சுரன்வழக்கு அற்றது என்னாது, உரஞ்சிறந்து, 10
 
          நெய்தல் உருவின் ஐது.இலங்கு அகல்இலைத்
          தொடைஅமை பீலிப் பொலிந்த கடிகை,
          மடைஅமை திண்சுரை, மரக்காழ் வேலொடு
          தணிஅமர் அழுவம் தம்மொடு துணைப்பத்,
          துணிகுவர் கொல்லோ தாமே - துணிகொள 15