பக்கம்:அகநானூறு 1, புலியூர்க் கேசிகன்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

10

அகநானூறு - களிற்றியானை நிரை



வளைந்த தலையாட்டத்தினால் அழகுபெற்ற, கொய்த பிடரி மயிரினையுடைய குதிரைகளை இழுத்துச் செலுத்தும் கடிவாளம் நெகிழப், பூத்த சோலையிலே தம் துணையோடு வாழ்ந்த, யாழ் நரம்பு ஒலித்தாற்போல முரலுகின்ற, தேனையுண்ணும் வண்டினங்கள் பேதுற்று மயங்குமோ வென அஞ்சித் தன் தேர்மணிகளின் நாவை ஒலியாமற் கட்டுபவன் நின் தலைவன். தேரைச் செலுத்துவதிலே மாட்சிமைப்பட்டவனான அவன், விரைந்து தேரைச் செலுத்தி வந்து உவ்விடத்தே தோன்றுவான். அதனால், நின் வருத்தத்தைக் கைவிடுவாயாக!

சொற்பொருள்: 1.இல்லம் - தேற்றாமரத்தின் பூ. 2. பிணி - மொட்டு. அவல் அடைய - பள்ளங்கள் எல்லாம். தெறித்தல் துள்ளுதல். 6 புலம்பு - நீர்பெறாத வருத்தம். புறக்கொடுத்தல் - புறத்தே போதல். 8. குரங்குளை - வளைந்த தலையாட்டம். 11. தாது.ண்பறவை - வண்டினம். பேதுறல் - மய்க்கமுறுதல். 14. உறந்தைக் குணாது குன்றம் - உறையூர்க்குக் கீழ்ப்பாலதாகிய சிராப்பள்ளி மலை.

'துணை வண்டுகளின் பிரிவுக்கு அஞ்சுமவன் நின்னைப் பிரிய ஒவ்வான்; விரைய வருவான் என்பது கருத்து. கடிவாளம் நெகிழ' என்றது குதிரைகளை வேகமாகச் செலுத்தி என்றபடி

5. பிழையலள் மாதோ?

பாடியவர்: பாலை பாடிய பெருங்கடுங்கோ. திணை: பாலை. துறை: பொருள்வயிற் பிரியக் கருதிய தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லிச் செலவழுங்கியது.

(பொருள் வேட்கையானது உள்ளத்திலே மிக்கு எழத் தன் தலைவியைப் பிரிந்து செல்ல நினைத்தான் ஒரு தலைவன். அவன் பிரிவை அறிந்த அவளுடைய நிலைமையைக் கண்டான். அதனைத் தன் நெஞ்சிற்குச் சொல்லித் தான் போவதையும் நிறுத்திக் கொண்டான்.)

அளிநிலை பொறாஅது அமரிய முகத்தள்,
விளிநிலை கொள்ளாள், தமியள், மென்மெல,
நலமிகு சேவடி நிலம்வடுக் கொளாஅக்,
குறுக வந்துதன் கூர்எயிறு தோன்ற

வறிதகத் தெழுந்த வாயல் முறுவலள்
5


கண்ணிய துணரா அளவை, ஒண்ணுதல்,
வினைதலைப் படுதல் செல்லா நினைவுடன் -
முளிந்த ஓமை முதையலம் காட்டுப்,
பளிங்கத் தன்ன பல்காய் நெல்லி,

மோட்டிரும் பாறை ஈட்டுவட்டு ஏய்ப்ப,
10