பக்கம்:அகநானூறு 1, புலியூர்க் கேசிகன்.pdf/244

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

230

அகநானூறு -களிற்றியானை நிரை


(10), பெண்னையம் பேரியாற்று நுண்அறலினைக் கூந்தலுக்கும் (35) உவமைகளாகக் கூறியுள்ளனர். ஆர்வ நெஞ்சமொடு ஆய்நலன் அளைஇத், தன் மார்பு துணையாகத் துயிற்றுக தில்ல' எனத் தன் மகளைக் காதலன் பேணுதலை விரும்பும் தாய்மையுள்ளம் (35) இவரால் நன்றாக விளக்கப்பட்டுள்ளது.

அள்ளுர் நன்முல்லையார் (46)

பாண்டிநாட்டுச்சிவகங்கைக்குஅருகிலுள்ள அள்ளுரினர்.இவர் முல்லை என்பது இவரது பெயர். பெயரைக்கொண்டு இவர் பெண்பாற்புலவர் என்பர். இவர் பாடியவை குறுந்தொகையுள் 9, அக, 1, புறநா. 1. ஆகியவை. இந்நூலுள் இவர் பாடியது மருதத்திணை பற்றிய பாடலாகும். இந்தப் பாடலுள், இவரே அள்ளுரினைச் சிறப்பித்துள்ளதுடன், அது கொற்றச் செழியனைச் சேர்ந்தது எனவும் கூறுகிறார். ஊரவர் தன் தலைவனின் பரத்தைமை ஒழுக்கத்தைக் கூறித் தூற்றின போதும், தான் தன் வாயாற் சொல்லவிரும்பாத மனைவியின் கற்புப் பெருந்தகுதியினை இப்பாடலுள் காணலாம். பெண்மையின் தனிச்சிறப்பு இதுவே: குலமகளிர் பண்பும் இதுவேயாகும்.

ஆர்க்காடுகிழார் மகனார் வெள்ளைக் கண்ணத்தனார் (64)

வடாற்காடு மாவட்டத்து ஆர்க்காடு என்னும் ஊரினர் இவர் வெள்ளைக் கண்ணத்தனார் இவரின் பெயர். அத்தனார் பெயர் எனவும், வெள்ளைக்கண் உறுப்பின் சிறப்பால் அமைந்தது எனவும் கொள்வர். இந்தச் செய்யுள் ஒன்றே இவர் பாடியதாகக் கிடைத்துள்ளது. ‘ஏறு உடனிலை வேட்கையினால் மடநாகு தரீஇ ஊர்வயிற் பெயரும் இனிய காட்சியை இதனுள் காணலாம். மழைக் காலத்து, புற்றுக்களின் நனைந்த மண்ணினைத் தம் கொம்புகளால் குத்திக்கிளைத்து, மண்ணுடைக் கோட்ட வாக ஏறுகள் தோற்றும் நிலையினையும் காணலாம். ஆக்கள் வீடு திரும்பும்போது, கன்று பயிர் குரலவாக வருவதும், இன்றும் காணக்கூடியதே. இவ்வாறு மெய்க் காட்சிகளுடன் அமைந்து மன நெகிழ்வை விளக்குவது இவருடைய இச் செய்யுள்.

ஆலங்குடி வங்கனார் (106)

இவர் பாடல்களுட் பலவும் மருதத்திணை பற்றியனவே, நற்றிணையுள் மூன்றும், குறுந்தொகையுள் இரண்டும், அகத்தில் ஒன்றும், புறத்தில் ஒன்றும் ஆக இவர் பாடியவை ஏழு செய்யுட்கள். வங்கனார் இவர் இயற்பெயராக இருக்கலாம் என்பர். இப் பாடலுள் கொற்றச் செழியனின் போராற்றலையும், அவன் பாணர்க்குக் களிறுகளைப் பரிசிலாக வழங்கும் சிறப்பினையும் கூறியுள்ளார். பெண்மையின் இயல்பு, இளைய