பக்கம்:அகநானூறு 1, புலியூர்க் கேசிகன்.pdf/268

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

254

அகநானூறு -களிற்றியானை நிரை


பிற்சேர்க்கை - 2

பாடப்பட்டோர் வரலாறு

(அகநானூறு களிற்றியானை நிரையினுள், புலவர்களால் கூறப்பட்டிருக்கும் தலைவர்களின் வரலாறுகள் இதன்கண் தொகுத்துத் தரப்பட்டிருக்கின்றன. இவை, அந்தச் செய்திகளை நன்கு அறிந்து இன்புறவும், அவற்றின் வரலாற்றுச் சிறப்பை உணரவும், ஓரளவுக்கு உதவுவனவாகும்.)

அஃதை (96)

இவள் சோழர் குலத்து நங்கை. இவளுடைய தந்தையும் இவள் உடன் பிறந்தாருமாகிய சோழர்கள் பலரும் ஒருங்கு திரண்டு, பருவூர்ப் பறந்தலை என்னுமிடத்திலே சேர பாண்டியரை வென்ற சிறப்பினை (அகம், 96) மருதம் பாடிய இளங்கடுங்கோவும் குறிப்பிடுகிறார். அதுகாலை போரிட்ட சேரபாண்டியர் யாவர் என அறிதற்கு இயலவில்லை.

அகுதை (76, 113)

இவன் கூடல் நகரிலே வாழ்ந்தவன். இவனைப் பாடியவர்கள் கபிலர், கல்லாடனார், பரணர், மருதம் பாடிய இளங்கடுங்கோ, வெள்ளெருக்கிலையார் முதலியோராவர். ‘மணநாறு மார்பின் மறப்போர் அகுதை' (புறம். 347) என இவனுடைய மறம் சிறப்பிக்கப் பெறுகிறது. இவன் பாண்டியர் படைத்தலைவருள் ஒருவன் எனவும், பாண்டியர்க்குத் துணையாகப் போரிட்டு எவ்வி என்பானை வென்று, அவனுடைய நீடூரையும், மிழலையையும் கைப்பற்றினான் எனவும் சிலர் கூறுவர். இவனது நாடு நெய்தலம் செறுவின் வளங்கெழு நன்னாடு (அகம்.13), எனக் குறிக்கப்பட்டுள்ளதனால், மேற்கான் நாட்டுக் கூடலாகிய, இந்நாளைய தென்னார்க்காடு மாவட்டத்துக் வடலூரே இவனிருந்த இடம் என்பர் மற்றுஞ் சிலர்.

ஆய் எயினன் என்பான் வெளியத்து, வேளிர்குலத் தலைவன். பாழிக்கு உரியவனான நன்னன் என்பவன் இவன் நண்பன். இந்த நன்னனுக்கும் மிஞிலி என்பவனுக்கும் பகையுண்டாயிற்று. மிஞலியும் ஆற்றலுடைய பெருவீரன். அவனுக்கு எதிர்நிற்க இயலாது வாடிய நன்னன், ஆய் எயினனின் உதவியை வேண்டினான். அவனும், தன் படையோடு துணைவந்து போரிட்டான். ஆனால், நன்னன் போரிற் கலந்து கொள்ளாமல் போகவே, ஆய் எயினன், களத்தில் வீழ்ந்தான். அவன் மகளிர்கள் மிஞரிலியின் கொடுமையினால் கொண்ட துயரோ மிகவும்