பக்கம்:அகநானூறு 1, புலியூர்க் கேசிகன்.pdf/275

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூலமும் உரையும்

புலியூர்க் கேசிகன் ★ 261


பாதுகாவலாக வைத்திருந்தனர் என்பர். விச்சிக்கோ என்பானின் வமிசத்து முன்னோன் இவன். இவன் மகன் நன்னன் மீது இரணியமுட்டத்துப் பெருங்குன்றூர்ப் பெருங்கெளசிகனார். என்பவர், மலைபடுகடாம் என்னும் அரிய நூலைப் பாடியுள்ளனர். இவனே பெண் கொலை புரிந்த நன்னன் என்று ஆன்றோரால் பழிக்கப்படுபவன். மிஞிலியோடு பகைகொண்டு அவன் படையெடுத்து வரத், தன் துணைக்கு வந்த ஆய்எயினன் என்பர்னோடு சேர்ந்து போரிடாமல், அவனை அழிய விட்டுவிட்டவன் இவன். இந்தக் குறைபாடுகளுடன் வள்ளன்மையும், சிறப்பும், வளமும் உடையவனாகவும் இவன் திகழ்ந்தான். இவனிருந்த நாடு, இன்றைய சேலம் வடாற்காடு மாவட்டத்துப் பகுதிகளுள், திருப்புத்தூர், செங்கம் இடங்களையொட்டி இருந்தது. 'நன்னன் நறுமா கொன்ற ஒன்று மொழிக் கோசர்' என்பதனால், இவன் கோசர்களுடன் பகை கொண்டு போரிட்டவன் என்றறியலாம்.

நன்னன் -2 (44)

இவன் சேரர்களின் படைத் தலைவருள் ஒருவனாக விளங்கிய நன்னன் ஆவன். இவன் வேறு; அருங்கடிப் பாழி நன்னன், நன்னன் வேண்மான் ஆகியோர் வேறு. கழுமலப் போரிலே சேரர்களுக்குத் துணையாகப் போரிட்டுச் சோழர்களின் தளபதியான பழையனால் அழிக்கப்பட்டவன் இவன்.

நெடுவேள் ஆவி (1, 61)

இவனைப் பாடியவர் மாமூலனார். இவன் பொதினி மலைத் தலைவன். வேளிர்குலத்துப் புகழ்மிக்க தலைவர்களுள் ஒருவன். குதிரைப் படையுடன் இவன் நாட்டிலே புகுந்து கொடுமையாக போரிட்ட மழவர்களை அடித்து வெருட்டிய சிறப்பினன். இவனைப் பாடிய மாமூலனார் இமயவரம்பன் காலத்தவர். இவன் பெண்மக்கள் இருவருள் ஒருத்தி இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனையும், மற்றொருத்தி செல்வக் கடுங்கோ வாழியாதனையும் மணந்த சிறப்பினர். இப்பாடலுள், இவன் மழவரை வெருட்டிய போர்ச் சிறப்புக் கூறப்பெற்றுள்ளது. முருகனைப்போல் நல்ல போராற்றல் உடையவன் என்கிறார் கவிஞர். 'நெடுவேளாவி பொன்னுடை நெடுநகர் பொதினி (பழனி) அன்னநின் ஒண்கேழ் வனமுலை' என, இவன் மலை மீண்டும் (61) சிறப்பிக்கப் பெறுகிறது.

பண்ணன் (55)

சிறுகுடிகிழான் பண்ணன் என்று சிறப்பிக்கப் பெறுபவன் இவனே. இவனுடைய சிறுகுடி காவிரிக்கரையில் உள்ளது